YouTurn

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் அண்ணாமலை முதலிடம் எனப் பரவும் எடிட் செய்தி !

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் அண்ணாமலை முதலிடம் எனப் பரவும் எடிட் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் முதல் மூன்று அரசியல் தலைவர்களில், முதல் இடம் பிடித்த நம் அண்ணாமலை அண்ணன்



Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் புதியதலைமுறை செய்திச் சேனல் நடத்திய ஆய்வில், " தமிழ்நாட்டின் முதல் 3 தலைவர்களை வரிசைப் படுத்துக " என்ற பிரிவில் பாஜக தலைவர் அண்ணாமலை 13.49% உடன் முதல் இடத்தில் இருப்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில்  பகிரப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனையா, சறுக்கலா என்கிற தலைப்பில் புதியதலைமுறை செய்தி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகியது. 20 பகுதிகளை 5 மண்டலமாக பிரித்து ஏப்ரல் 21 முதல் மே 15 வரை கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.



புதியதலைமுறை கருத்துக்கணிப்பில் ரேங்க் 1 பிரிவில் மு.க.ஸ்டாலின் 49.10% உடன் முதலிடத்தில் இருக்கிறார். ரேங்க் 2 பிரிவில் எடப்பாடி பழனிசாமி 16.69% உடன் முதலிடத்தில் இருக்கிறார். அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பரவும் ரேங்க் 3 பிரிவில் சீமான் அவர்களே 13.49% உடன் முதலிடத்தில் இருக்கிறார், அண்ணாமலை அல்ல.



Facebook link 

ரேங்க் 3 பிரிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலிடத்தில் இருப்பது போன்று பெயர் மற்றும் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.



இந்த கருத்துக் கணிப்பில் அண்ணாமலை பற்றி பார்க்கையில், முதன்மை தலைவர்கள் வரிசையில் வயது வாரியாக அட்டவணையில் 4வது இடத்தில் அண்ணாமலை இருக்கிறார்.



முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாட்டில் முதல் மூன்று அரசியல் தலைவர்களில், முதல் இடம் பிடித்த அண்ணாமலை எனப் பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க