YouTurn

தமிழக பாஜக மது, போதைப் பொருட்களை வழங்குவதாக எடிட் செய்த புகைப்படம் !

தமிழக பாஜக மது, போதைப் பொருட்களை வழங்குவதாக எடிட் செய்த புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட பைகளில் " மது மற்றும் போதை பொருட்கள்.. பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும். தனித்திரு.. மகிழ்ந்திரு " என்ற வாசகம் இடம்பெற்று இருப்பதாக ஓர் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜகத் தலைவர் எல்.முருகன்...

பரவிய செய்தி

இதெல்லாம் ஒரு கட்சியா ?



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட பைகளில் " மது மற்றும் போதை பொருட்கள்.. பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும். தனித்திரு.. மகிழ்ந்திரு " என்ற வாசகம் இடம்பெற்று இருப்பதாக ஓர் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜகத் தலைவர் எல்.முருகன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற பையில் யாரோ வேண்டுமென்றே " மது மற்றும் போதை பொருட்கள் " என எடிட் செய்து இருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

இது குறித்து தேடிய பொழுது, ஏப்ரல் 14-ம் தேதி பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் ட்விட்டர் பக்கத்தில், " இன்று Dr.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது " என மோடிகிட் வழங்குவதாக சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.



Twitter link | archive link

மற்றொரு ட்வீட் பதிவில், " எனது இல்லத்திற்கு அருகாமையில் இருந்த பல்வேறு விதமான தொழிலாளர்களுக்கு அடுத்த 20 நாட்களுக்கு அவர்கள் வீட்டிலேயே சமைத்துக் கொள்வதற்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய "மோடி கிட்" வழங்கிய போது " என சில படங்கள் பதிவிட்டு இருக்கிறார்.







பாஜக சார்பில் வழங்கப்பட்ட மோடி கிட் பைகளில் " கொரோனா நிவாரண பொருட்கள் " என இடம்பெற்று இருக்கும் இடத்தில் " மது மற்றும் போதை பொருட்கள் " என எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.



நம்முடைய தேடலில், தமிழக பாஜக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய மோடி கிட் பைகளில் மது மற்றும் போதை பொருட்கள் என எடிட் செய்து அரசியல் சார்ந்து தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…