
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம் 😡😡😡
குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று சொல்லி திருப்பூரில் பெண்ணை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்க பட்டன பெண் படுகாயம்.
அண்ணா @SeemanOfficial சொன்னது விரைவில் நடக்கப்போகிறது.
நடவடிக்கை எடுப்பாரா @mkstalin.@maayonism pic.twitter.com/mZxM2dkKtb
— Seenu Tom (@SeenuTom) October 1, 2022
உண்மை என்ன ?வைரல் செய்யப்படும் சிசிடிவி காட்சியிலிருந்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடினோம். அவ்வாறு தேடியதில் நவ்பாரத் டைம்ஸ் (Navbharat Times) என்ற யூடியூப் பக்கத்தில் 2022, செப்டம்பர் 14ம் தேதி அவ்வீடியோ தொடர்பாகச் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், ஜெய்பூரில் கர்தானி என்ற பகுதியில் நிகழ்ந்த சம்பவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரி போல் வந்த ஒருவர் வீட்டில் உள்ள பெண்ணிடம் விசாரணை செய்கிறார். அந்த விசாரணையில் வீட்டில் யார் உள்ளது ? உங்களது கணவரின் பெயர் என்ன ? என்பது போன்ற விவரங்களைக் கேட்டுள்ளார்.
பின்னர், அந்த நபர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுக் குடித்துள்ளார். அப்போது திடீரென அப்பெண்ணை தாக்கிவிட்டு அந்த போலி காவலர் மற்றும் இரண்டு பேர் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்தப் பொருட்களைத் திருடிக் கொண்டு தப்பிச் செல்கின்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது " எனக் கூறப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த இக்கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி வீடியோவினை தமிழ்நாட்டின் திருப்பூரில் நடந்ததாகப் பலர் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
Don't Spread Fake News#வதந்தீ #DontSpreadFakeNews #KillFakeNews #BreakTheChain #DGPSylendrababuIPS #TNPolice pic.twitter.com/VmXhQQTjcL
— Tamil Nadu Police (@tnpoliceoffl) October 2, 2022
இந்த வீடியோ குறித்து தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், வதந்தியை பரப்ப வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், வட மாநில கொள்ளையர்கள் திருப்பூரில் பெண் ஒருவரைத் தாக்கிவிட்டுப் பல லட்ச மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அந்த கொள்ளை சம்பவம் ஜெய்பூரில் நடந்தது என்பதை அறிய முடிகிறது.