YouTurn

திருப்பதி லட்டு குறித்துப் பேசியதற்கு பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதாகப் பரவும் பொய்!

திருப்பதி லட்டு குறித்துப் பேசியதற்கு பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2019ஆம் ஆண்டு பாஜகவினரால் பியூஷ் மனுஷ் தக்கப்பட்ட வீடியோ தற்போது நடந்ததாகத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

குட்ட குட்ட குனிந்து  கொன்டே இருக்கமாட்டான்டா  இந்துக்கள் நேத்து திருப்பதி லட்டு விவகாராத்தில் ஹிந்துகளை இழிவு படுத்திய   பியுஷ் மனுஷ்க்கு சேலத்தில் முதல் மரியாதை


tirupati laddu piyush manush

X link

விரிவான விளக்கம்

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக அறிக்கை வெளியானது. இது பற்றி சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். 


https://x.com/i/web/status/1836797660029915190


அந்த வீடியோவில், "இத்தனை நாட்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்களா என மற்றவர்களின் தட்டினை பார்த்தீர்கள், வீட்டில் சென்று பார்த்தீர்கள். கொலைகூடச் செய்தீர்கள். இப்போது என்ன நடந்தது பார்த்தீர்களா? இதற்கு மேலாவது அடுத்தவர் தட்டில் என்ன இருக்கிறது எனப் பார்க்காதீர்!" எனக் கூறியிருந்தார். 


https://x.com/i/web/status/1838235941359571340


அவரது இந்த கருத்துக்காக தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வலதுசாரி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


பியூஷ் மனுஷ் தாக்கப்படும் வீடியோ குறித்துத் தேடியதில், 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ’NewsGlitz’ யூடியூப் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. 



பேஸ்புக்கில் லைவ் செய்தபடி பொருளாதாரம், காஷ்மீர் பிரச்சனை மற்றும் இன்னபிற பிரச்சனைகள் குறித்து பாஜகவினரிடம் கேள்வி கேட்கலாம் என பியூஷ் மனுஷ் சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பாஜகவினரால் தாக்கப்பட்டார். 


இத்தாக்குதல் சம்பவம் நடந்தபோது இது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய பியூஸ் மனுஷ், ”நான் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. எனப் பலரது அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறேன். கேள்வி கேட்டிருக்கிறேன். வேறு எங்குமே இப்படி நடந்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ’புதிய தலைமுறை’ தளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. அதிலும் பாஜக அலுவலகம் சென்றவர் மீது தாக்குதல் என்றுதான் கூறப்பட்டுள்ளது.



இவற்றிலிருந்து திருப்பதி லட்டு குறித்து பியூஷ் மனுஷ் பேசியதற்கும் பரவக்கூடிய வீடியோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. 


திருப்பதி லட்டு விவகாரத்துடன் தொடர்புப்படுத்தி பல பொய் செய்திகள் பரப்பப்படுகிறது. அது பற்றிய உண்மைகள் யூடர்ன் தளத்தில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: ’ஏ.ஆர். டெய்ரி’ நெய்யில் பழனி, திருத்தணி பஞ்சாமிர்தம் செய்யப்படுவதாகப் பரவும் பொய்!


மேலும் படிக்க: திருப்பதி லட்டு நெய் விவகாரம்.. முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பும் வலதுசாரிகள்!

முடிவு: 


திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அது பற்றி பியூஷ் மனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டது உண்மைதான். 


ஆனால், இதற்கும் பரவக்கூடிய வீடியோவில் உள்ள சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது 2019ஆம் ஆண்டு பாஜகவினரால் பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்டது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க