யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விருதுநகர் மாவட்டத்தின் ஆர்.ஆர் நகரில் ராம் & கோ சிமெண்ட் ஆலை பகுதியில் சிங்கம் உலாவுகிறது.
Facebook link
Facebook link
விரிவான விளக்கம்
விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள ஆர்.ஆர் நகர் சிமெண்ட் உற்பத்தி ஆலை பகுதியில் சிங்கம் ஒன்று நடமாடுவதாக 20 நொடிகள் கொண்ட வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதே வீடியோவை, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் அமைந்து இருக்கும் சிமெண்ட் ஆலை பகுதி என சில தினங்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் செய்து இருக்கிறார்கள்.
பரவி வரும் வீடியோ குறித்து திருநெல்வேலி மாவட்ட துணை ஆணையர் (எஸ்.பி) அர்ஜுன் சரவணன் தன் ட்விட்டர் பக்கத்தில், " வதந்தி பரப்பாதீர்கள். கடந்த இரு நாட்களாக திருநெல்வேலி சிமெண்ட் பாக்டரி அருகே சிங்கம் உலாவுகிறது என வாட்சப்பில் வதந்தி. இது குஜராத் மாநில சிமெண்ட் பாக்டரி. எனவே நிம்மதியாக இருங்க மக்களே " எனப் பதிவிட்டு இருக்கிறார்.
Twitter link | Archive link
சிங்கத்தின் நடமாட்டம் தொடர்பாக வனத்துறை அதிகாரி கவுதம், "இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டுமே சிங்கம் உள்ளது. பக்கத்துக்கு மாநிலங்களுக்கு பரவி இருக்கலாம். ரயிலில் இவ்வளவு தூரம் வர வாய்ப்பில்லை. இருப்பினும், வன ஊழியர்களை கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளேன் " எனக் கூறியதாக செய்தித்தாள் பக்கம் ஒன்றை இந்த பதிவின் கமெண்டில் பதிவிட்டு ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வனத்துறை பிரிவை தொடர்பு கொண்டு பேசுகையில், " சிங்கம் நடமாடியது சங்கர் சிமெண்ட் ஆலை அருகே எனக் கூறினார்கள். இதையடுத்து, வனத்துறை சார்ந்த ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தோம். அந்த பகுதியில் சிமெண்ட் ஆலை இருப்பது உண்மை என்றாலும், வீடியோவில் இருப்பது போன்ற பகுதி அங்கு இல்லை. வீடியோவில் இடம்பெற்று இருப்பது குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஏனெனில், குஜராத் மாநிலத்தில் தான் சிங்கங்கள் உள்ளன, இங்கில்லை. சரக்கு ரயிலில் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் சோதனை செய்து பார்த்து விட்டோம். அப்படி ஏதுமில்லை " எனத் தெரிவித்து இருந்தனர்.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மக்கள் நடமாடும் பகுதிகளில் சிங்கங்கள் நடமாடும் சம்பவங்கள் அதிகம் நிகழ்வதுண்டு. தமிழ்நாட்டில் வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலேயே சிங்கங்களை காண முடியும்.
சிங்கத்தின் வீடியோ உடன் பின்னணியில் இசையை இணைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருப்பதால் வைரல் செய்யப்படும் எந்த பகுதியில் எடுக்கப்பட்டது, யார் எடுத்தது என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க : சென்னை துறைமுகத்திற்குள் சிங்கங்கள் நுழைந்தனவா ?
இதற்கு முன்பாக குஜராத் துறைமுக பகுதியில் சிங்கங்கள் சுற்றி திரிந்த புகைப்படங்கள் தமிழ்நாட்டின் சென்னை துறைமுகத்தில் எடுக்கப்பட்டதாக வாட்ஸ் அப் வதந்தி பரவியது குறித்து நாம் முன்பே பதிவிட்டு இருந்தோம்.
தொழிற்சாலை பகுதியில் சிங்கம் நடமாடும் வீடியோவை ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் பரப்புவதை பார்க்க முடிகிறது. அதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம். தமிழகத்தில் சிங்கம் நடமாடுவதாக பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

வதந்தி பரப்பாதீர்கள்.
கடந்த இரு நாட்களாக திருநெல்வேலி சிமெண்ட் பாக்டரி அருகே சிங்கம் உலாவுகிறது என வாட்சப்பில் வதந்தி.
இது குஜராத் மாநில சிமெண்ட் பாக்டரி.
நெல்லையில் இருக்கும் ஓரே சிங்கம் "துரைசிங்கம்" மட்டுமே.😃
எனவே நிம்மதியாக இருங்க மக்களே!#திருநெல்வேலி #சிங்கம் pic.twitter.com/Mkmrlf03yo
— Arjun Saravanan (@ArjunSaravanan5) June 21, 2021