YouTurn

பேரரசர் திப்பு சுல்தானால் நிறுவப்பட்ட கிணறா ?

பேரரசர் திப்பு சுல்தானால் நிறுவப்பட்ட கிணறா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

போர்ச்சுகல் நாட்டின் வரலாற்று சிறப்புமிகுந்த நகரான சின்ட்ராவில் உள்ள “ குயிண்டா டா ரேகலெய்ரா ” என்ற எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள இக்கிணறு பெரிதாகவும், புதிரான அமைப்புடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது “Initiation Wells ” என்று அழைக்கப்படுகின்றது. ஜான் லூகாஸ் என்பவர் இத்தகைய புதிரான கிணற்றை...

பரவிய செய்தி

மைசூரின் பேரரசர் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட கிணற்றின் அரியப் புகைப்படம். எளிதாக கிணற்றின் அடிவரை செல்வதற்கு ஏதுவாக படிக்கற்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

போர்ச்சுகல் நாட்டின் வரலாற்று சிறப்புமிகுந்த நகரான சின்ட்ராவில் உள்ள “ குயிண்டா டா ரேகலெய்ரா ” என்ற எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள இக்கிணறு பெரிதாகவும், புதிரான அமைப்புடனும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது “Initiation Wells ” என்று அழைக்கப்படுகின்றது.


ஜான் லூகாஸ் என்பவர் இத்தகைய புதிரான கிணற்றை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். இக்கிணறானது, இருள் மற்றும் ஒளி, இறப்பு மற்றும் பிறப்பு ஆகியவற்றிற்கு இடையேயான பயணத்தை விளக்கும் வடிவமாகக் கருதப்படுகிறது.


   


இத்தகைய விசித்திரமான கிணறுக்குள், அப்பகுதியில் உள்ள பல இடங்களுக்கு செல்ல ஏதுவாக பல சுரங்கப்பாதைகள் உள்ளன. இந்த கிணறு தண்ணீரை சேமிப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல, எஸ்டேட்டில் உள்ள மற்ற இடங்களுக்கு செல்ல அமைக்கப்பட்ட பாதைகளை இணைக்கும் இடமாக உள்ளது. இதனுள் 27 மீட்டர்க்கு வளைவான படிக்கற்கள் அமைந்துள்ளன. படிக்கற்கள் மூலம் அடிவாரத்தை இணைக்கும் வேலைபாடானது பார்ப்பதற்கு மோதிரம் வடிவில் சென்றிருக்கும்.


இதற்கு “ முடிவடையாத கிணறு ” என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இத்தாலி நாட்டிலும் இக்கிணற்றின் தோற்றத்தை போன்று ஓர் கிணறு உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.




ஆக, போர்ச்சுகல் நாட்டில் உள்ள சுரங்கப்பாதை கிணற்றை மைசூர் அரசர் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட கிணறு என்று தவறானச் செய்திகளைபச் சிலர் வெளியிட்டுள்ளனர்.

சுருக்கமாக

புதிரான தோற்றம் கொண்ட இக்கிணறு போர்ச்சுகல் நாட்டில் அமைந்துள்ளது. கிணற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கென இதனுள் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.