யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னான கருத்து கணிப்பு அனைத்து செய்தி ஊடங்களிலும் முதன்மை செய்தியாக வெளியாகி வருகின்றது. தேசிய அளவில் தொடங்கி மாநில அளவிலான கருத்து கணிப்புகள் பல ஊடங்களினால் எடுக்கப்பட்டுள்ளன. டைவ் நவ் செய்தி ஊடகத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்...
பரவிய செய்தி
உத்தரகாண்டில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவே இல்லை என அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனாலும், டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் 2.9% வாக்குகள் பெற்றதாக தெரிவித்து உள்ளது.

விரிவான விளக்கம்
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னான கருத்து கணிப்பு அனைத்து செய்தி ஊடங்களிலும் முதன்மை செய்தியாக வெளியாகி வருகின்றது. தேசிய அளவில் தொடங்கி மாநில அளவிலான கருத்து கணிப்புகள் பல ஊடங்களினால் எடுக்கப்பட்டுள்ளன.
டைவ் நவ் செய்தி ஊடகத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகளை வெளியிட்டு இருந்தனர். அதில், காங் 38.81% , பிஜேபி 51.6% , பிஎஸ்பி 2.03%, ஆம் ஆத்மி 2.9%, பிற கட்சியினர் 4.66% சதவீத ஓட்டினை பெற்று உள்ளதாக ட்விட்டரில் வெளியிட்டனர்.

டைவ் நவ் செய்தியின் உத்தரகாண்ட் மாநில கருத்து கணிப்பு வேடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில், அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை என தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, டைம்ஸ் நவ் அந்த ட்விட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது. இதற்கு பின் தனது இணையதளத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் ஆம் ஆத்மி தவிர்த்த பிற கட்சிகளின் ஓட்டு சதவீதத்தை வெளியிட்டு உள்ளனர்.

இதே போன்று, சண்டீகர் தொகுதி குறித்து வெளியிட்ட ட்விட்டரில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 42.2% , ஆனால், 37.42 % வாக்கு பெற்ற பிஜேபி வெற்றி பெறும் எனக் குறிப்பிட்டு உள்ளனர். இந்த குளறுபடி நிறைந்த கருத்து கணிப்பு ட்விட்களை டைம்ஸ் நவ் நீக்கியுள்ளது.
டைம்ஸ் நவ் மட்டுமின்றி பல தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் குளறுபடிகள் உள்ளன. தேர்தலுக்கு முன்னும், பின்னும் பல ஊடகங்கள், அமைப்பால் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படலாம். ஆனால், அவை மிகச் சரியானவை என கூறிவிட முடியாது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் உண்மை நிலவரம் வரும் மே 23 -ம் தேதி தெரிந்து விடும்.