YouTurn

Time Travel செய்த மனிதன், புகைப்படத்தில் மூலம் கண்டுபிடிப்பு ! உண்மையா ?

Time Travel செய்த மனிதன், புகைப்படத்தில் மூலம் கண்டுபிடிப்பு ! உண்மையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

காலம் கடந்து பயணம் பற்றி குறிக்கும் கருத்துகள் சில படங்களுடன் வலைதளங்களில் பரவி அனைவரது மனதிலும் காலப்பயணம் உண்மையா? பொய்யா ? என்கிற கேள்விகளை தோற்றுவிக்கின்றன. அவற்றில் பல படங்கள் நம்பக்கூடிய வகையில் இருந்தாலும், அவ்வாறு பரவும் படங்கள் அனைத்தும் தவறாகப் புரிதலினால் பகிரப்பட்டவை. அவற்றில் ஒன்று...

பரவிய செய்தி

இந்த புகைப்படம் Fork bridge, கனடாவில் 1940 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள நபர் அணிந்திருக்கும் கண்ணாடி, உடை மற்றும் அவருடைய கேமரா ஆகியவை 1940-ம் ஆண்டை சார்ந்தது இல்லை. காலப்பயணம் செய்த நபர் என்று அடையலாம் காணப்படுகிறார்.

விரிவான விளக்கம்

காலம் கடந்து பயணம் பற்றி குறிக்கும் கருத்துகள் சில படங்களுடன் வலைதளங்களில் பரவி அனைவரது மனதிலும் காலப்பயணம் உண்மையா? பொய்யா ? என்கிற கேள்விகளை தோற்றுவிக்கின்றன. அவற்றில் பல படங்கள் நம்பக்கூடிய வகையில் இருந்தாலும், அவ்வாறு பரவும் படங்கள் அனைத்தும் தவறாகப் புரிதலினால் பகிரப்பட்டவை.



அவற்றில் ஒன்று கனடாவின் Fork bridge-ல் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள். இப்படங்கள் காலம் கடந்து பயணிப்பதை நம்புகின்ற வகையில் 2010-ல் வலைதளங்களில் பரவத் தொடங்கியது. அதற்கு முதல் காரணம், படத்தில் இடம்பெற்றிக்கும் வட்டமிட்ட நபர் மற்றவர்களை போல் அல்லாமல் வித்தியாசமாக டி-ஷர்ட், கண்ணாடி போன்றவற்றுடன் தோன்றியது தான். இது போன்ற உடை, கண்ணாடி, கேமரா போன்றவை 1940-களில் இருந்திருக்க வாய்ப்பில்லை என அவர் காலம் கடந்து வந்தவர் என்ற கேள்வியை எழுப்பலாம்.

இந்த படம் முதன் முதலில் பொதுமக்களின் பார்வைக்காக 2004-ல் Barlone-Pioneer Museum-ல் “Their Past Live Here” என்ற தலைப்பில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. 1941 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள South Fork bridge-யின் மறுதிறப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை. 2010-ல் இப்படங்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்திய படங்களின் தொகுப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த நபரின் படங்கள் KENTARO M0RI என்ற Youtube பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

1941-ல் எடுக்கப்பட்ட படத்தில் அந்நபர் பயன்படுத்திய உடை, கண்ணாடி மற்றும் சிறிய ரக கேமரா போன்றவை அன்றைய காலத்தில் புழக்கத்தில் இருந்தவையே.

M லோகோ இடம்பெற்ற டி-ஷர்ட் : 

அந்த நபர் பயன்படுத்திய டி-ஷர்ட் உடையில் M என்ற லோகோ உள்ளது. இந்த லோகோ 1924-1938 இடைப்பட்ட காலத்தில் NHL-க்கு தற்காலிகமாக விளையாடி வந்த Montreal Maroons  என்ற ஹாக்கி அணியினுடையது. அந்த அணி பயன்படுத்திய டி-ஷர்ட் உடையை தான் அவர் பயன்படுத்தி உள்ளார்.



கண்ணாடி: 

கண்களின் இருபுறத்தையும் மறைக்கும்படி வடிவம் கொண்ட இந்த கண்ணாடிகள் 1940-களிலே பயன்பாட்டில் இருந்துள்ளன. இக்கண்ணாடியை போன்று 1944-ல் வெளியான “ Double Indemnity ” என்ற திரைப்படத்தில் நடிகை Barbara stanwyck  பயன்படுத்தியுள்ளார்.



சிறிய ரக கேமரா:

20 நூற்றாண்டிலேயே கையடக்க சிறிய ரக Kodak கேமராக்கள் பயன்பாட்டில் வரத் தொடங்கின. குறிப்பாக 1940-ல் Kodak நிறுவனம் பல சிறிய ரக கேமராக்களை வெளியிட்டனர். அந்த நபர் அது போன்ற கேமராவை தான் பயன்படுத்தி உள்ளார்.



75 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் இருக்கும் கூட்டத்தில் ஒருவர் மட்டும் நவநாகரீக உடையில் வித்தியாசமாக இடம்பெற்றதே காலம் கடந்த மனிதர் என்ற கேள்வியை உண்டாக்குகிறது. எனினும், அந்த நபர் காலப்பயணம் செய்து வந்தவர் இல்லை என்பதை மேலே குறிப்பிட்ட செய்தியின் வாயிலாக அறிய முடிகிறது.

சுருக்கமாக

படத்தில் குறிப்பிட்ட நபர் அணிந்து இருக்கும் உடை ஒரு ஹாக்கி அணியின் டி-ஷர்ட் ஆகும். அவர் பயன்படுத்திய கண்ணாடி மற்றும் கேமரா 1940-ம் ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்துள்ளன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க