YouTurn

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை நீக்க மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டதா ?

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை நீக்க மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் எத்தனை வீரர்கள் பலியாயினர் என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதையடுத்து, சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன. மத்திய அரசு சீன...

பரவிய செய்தி

டிக்டாக் உள்ளிட்ட சீன தயாரிப்பு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்டவையில் இருந்து நீக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தேசிய தகவலியல் மையம் வெளியிட்ட சுற்றறிக்கை. 

விரிவான விளக்கம்

லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் எத்தனை வீரர்கள் பலியாயினர் என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதையடுத்து, சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன. மத்திய அரசு சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. மக்களும் சீன தயாரிப்பு செயலிகளை நீக்கி வருவதாக பதிவிட்டனர்.

இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சீன தயாரிப்பு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் பிற அப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய அரசின் தரப்பில் இருந்து சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளதாக மேற்காணும் சுற்றறிக்கை இந்திய அளவில் பரவி வருகிறது.



Twitter link | archive link 

ஆனால் மத்திய பத்திரிகை தகவல் மையம்(PIB) , அரசு தரப்பில் அப்படி எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை. மேற்கண்ட கூற்றுடன் பகிரப்படும் அறிக்கை போலியானது என ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது.



இதற்கு முன்பாக, டிக்டாக், யுசி ப்ரவுசர் உள்ளிட்ட 52 சீன செயலிகள் பட்டியலை புலனாய்வு அமைப்பு இந்திய அரசிடம் ஒப்படைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செயலிகளை நீக்க வேண்டும் அல்லது மக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துமாறு இன்டெல் ஏஜென்சி கேட்டுக் கொண்டது. இந்த செயலிகள் சீனாவுடன் இணைக்கப்பட்டுஉள்ளதாகவும் , இவைகள் அதிக அளவில் தகவல்களை கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்திய தரப்பில் சீன செயலிகளை நீக்குவதோ அல்லது தடை செய்ய எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க