YouTurn

Tik Tok மீதான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதா ?

Tik Tok மீதான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த ஒரு சில வருடத்திலேயே டிக் டாக் எனும் செயலி அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலமாகியது. எனினும், டிக் டாக் செயலியில் ஆபாசங்கள் அதிகரித்து உள்ளதாகவும், பலரும் தற்கொலைக்கு காரணம் என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் செயலிக்கு தடை விதித்து உத்தவிட்டது...

பரவிய செய்தி

டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உத்திரவிட்டு உள்ளது உச்ச நீதிமன்றம்.

விரிவான விளக்கம்

கடந்த ஒரு சில வருடத்திலேயே டிக் டாக் எனும் செயலி அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலமாகியது. எனினும், டிக் டாக் செயலியில் ஆபாசங்கள் அதிகரித்து உள்ளதாகவும், பலரும் தற்கொலைக்கு காரணம் என புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் செயலிக்கு தடை விதித்து உத்தவிட்டது உயர் நீதிமன்றம். இதன்பின், நீதிமன்ற உத்தரவை ஏற்ற மத்திய அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டு உள்ளது.

எனினும், டிக் டாக் மீதான தடை நிரந்த தடையாக இல்லாமல் இருந்து உள்ளது. செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம் டிக் டாக் மீதான தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


இந்த மேல்முறையீட்டு வழக்கில்உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், " ஏப்ரல் 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் டிக் டாக் செயலி மீதான தடை உத்தரவிற்கு எதிரான மனு குறித்து விசாரித்து  முடிவு எடுக்க வேண்டும். மனு மீதான எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்தால் டிக் டாக் மீதான தடை தானாகவே விலகியதாக கருதப்படும் " எனத் தெரிவித்து உள்ளனர்.

தற்பொழுது வரை டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை. செயலி தரப்பில் இருந்து வாதங்கள் பெறவில்லை என்பதால், அவர்களின் மனுவின் மீதான விசாரணை தொடங்கி அவர்களின் வாதங்களை பெற்றப் பிறகு தடை குறித்த சரியான தகவல்கள் வெளியாகும்.

சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 24-ம் தேதி தகுந்த முடிவு எடுக்கவில்லை என்றால் மட்டுமே தடை நீங்க வாய்ப்புள்ளது. ஆனால், டிக் டாக் மீதான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதாக தவறான செய்திகளை சமூக வலைதளங்கள், செய்தி சேனல்களிலும் வெளியாகி வருகிறது.

சுருக்கமாக

டிக் டாக் செயலி மீதான தடை முழுமையாக நீங்கவில்லை. தற்பொழுது வரை இடைக்கால தடையில் தான் செயலி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை க்கு எதிரான மனு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.