YouTurn

மூன்று கண்களைக் கொண்ட அதிசயக் குழந்தையா ?

மூன்று கண்களைக் கொண்ட அதிசயக் குழந்தையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அதிசயம் ஆனால் உண்மை மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தை.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

காரில் உள்ள குழந்தைக்கு நெற்றியில் மூன்றாவது கண் இருப்பதாக கீழ்க்காணும் வீடியோ தமிழ் உள்பட பல மொழிகளில் வைரலாகி வருகிறது. யூடர்ன் ஃபாலோயர்ஸ் தரப்பிலும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து கேட்டு இருந்தனர். ஆகையால், வைரலாகும் வீடியோ குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.



Facebook link | archive link  

உண்மை என்ன ? 

நெற்றியில் மூன்றாவது கண் இருப்பதாகக் கூறும் குழந்தையின் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து Invid டூல் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இந்த வீடியோ சீன மொழியிலும் கூட ட்விட்டர் தளத்தில் வைரலாகி இருந்தது. ஆனால், இந்த வீடியோ குறித்த அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது நம்பத்தகுந்த ஆதாரங்களோ ஏதும் இல்லை. மூன்று கண் கொண்ட குழந்தை பதிவின் கமெண்ட்களில் பலரும் போலியான வீடியோவாக இருக்கும் எனப் பதிவிட்டு வருகிறார்கள்.



Twitter link | archive link 

இதற்கு முன்பாக 2018-ல் 1 வயது குழந்தைக்கு இடது கண்ணிற்கு அருகே மூன்றாவதாக கண் இருப்பது தொடர்பான மருத்துவ அறிக்கை கிடைத்துள்ளது. 2018-ல் West african journal of radiology எனும் இணையதளத்தில் குழந்தையின் புகைப்படத்துடன் மருத்துவ அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். எனினும், இரண்டும் வெவ்வேறு குழந்தைகள்.



தற்போது வைரலாகும் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோதான். குழந்தையின் இடது கண்ணும், நெற்றியில் உள்ள கண்ணும் ஒன்றாக அசைவதை காணலாம். யாரோ ஒருவர் வேண்டுமென்றே குழந்தைக்கு மூன்றாவது கண் இருப்பது போல் சில மென்பொருளை பயன்படுத்தி எடிட் செய்து இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.



முடிவு : 

நம் தேடலில்,  மூன்று கண்களை கொண்ட அதிசயக் குழந்தை என வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க