YouTurn

மைதானமாக மாறிய சிதம்பரம் கோவில்..! கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்.. எனப் பரவும் காஞ்சிபுரம் கோவில் வீடியோ!

மைதானமாக மாறிய சிதம்பரம் கோவில்..! கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்.. எனப் பரவும் காஞ்சிபுரம் கோவில் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று பரவும் தகவல் தவறானது.

பரவிய செய்தி

தீட்சிதர் அணி 

எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் அல்ல.

சிதம்பரம் கோவிலே ஸ்டேடியமாக மாறியது.

சிவன் மேல பந்து பட்டா சிக்ஸ்.



X Link

விரிவான விளக்கம்

சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகி மீது தீட்சிதர்கள் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தீட்சிதர்கள்  கிரிக்கெட் விளையாடினர் என்றுக் கூறி 0:24 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

https://x.com/i/web/status/1843835188582986089


உண்மை என்ன ?


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், காஞ்சிபுரம் கோவிலில் வெங்கடேஷ் ஐயர் கிரிக்கெட் விளையாடினார் எனக் கூறி Gyani asad என்ற யூடியூப் பக்கத்தில் பரவக்கூடிய வீடியோ இருப்பதை காணமுடிந்தது. இந்த வீடியோ ஜுன் 06, 2023 அன்று வெளியிடப்பட்டிருந்தது.



மேலும் தேடுகையில், கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்திலிருக்கும் சந்திரசேகரேந்திர சுவாமி மணிமண்டபத்துக்கு வந்ததாகவும், அப்போது அங்கு பாட சாலையில் படிக்கும் மாணவர்கள் அவரை கிரிக்கெட் விளையாட அழைத்ததாகவும், அவர்களுடன் இவர் கிரிக்கெட் விளையாடியதாகவும் இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியின் மூலம் அறியமுடிந்தது. இந்த செய்தி ஜூன் 8,2023 அன்று பதிவிடப்பட்டுள்ளது.


image.png


தொடர்ந்து தேடுகையில்,  வெங்கடேஷ் ஐயர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோவை ஜூன் 05, 2023 அன்று பகிர்ந்திருப்பதை காணமுடிந்தது. அப்பதிவில் காஞ்சிபுரத்தில் உள்ள இளம் வேத பாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.


https://www.instagram.com/p/CtGdvm-ASHg/

 

இவற்றிலிருந்து, வைரலாகும் வீடியோவுக்கும், சிதம்பரத்தில் நடந்த சம்பவத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. 


முடிவு :


நம் தேடலில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று பரவும் தகவல் தவறானது. அவ்வீடியோ சென்ற வருடம் ஜூன் மாதத்தில் காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சுவாமி மணிமண்டப வளாகத்தில் வெங்கடேஷ் ஐயர் பாட சாலையில் படிக்கும் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்டது என்பதே உண்மையான தகவல்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க