
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அரபு நாடுகளில் வாழும் இந்தியர்கள் சிலர் முஸ்லீம்களுக்கு மதம் சார்ந்த தவறான கருத்துக்களையும், கொரோனா வைரசிற்கு முஸ்லீம்களே காரணம் என வதந்திகளையும் பரப்பியது ஒரு கட்டத்தில் அவர்களுக்கே எதிர்வினையாக மாறியது. இதனால், அரபு நாடுகளில் மதம் சார்ந்த தவறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் வேலையை இழக்கும் நிலை...
பரவிய செய்தி

Facebook link | archive link
விரிவான விளக்கம்
இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் எஸ்.வி.சேகர் மற்றும் நாராயணனன் ஆகியோர் பதிவிட்ட பதிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இத்தனை விரைவாக மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என மீம்ஸ்கள் பறந்தன.
இந்நிலையில், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி " அரேபியர்கள் இன்னும் வீரத்துடன் எதிர்த்திருந்தால் ஒட்டுமொத்த இந்துக்களும் முஸ்லீமாக மாறியிருப்பார்கள " என இந்துக்களை இழிவுப்படுத்தியதாக ஏப்ரல் 21-ம் தேதி நம் டிவி எனும் முகநூல் பக்கத்தில் நியூஸ் கார்டு போல் வெளியிடப்ப்பட்டு உள்ளது.
உண்மை என்ன ?

Twitter link | archive link
ஏப்ரல் 21-ம் தேதி திருமுருகன் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில், " ”அரேபியர்கள் இன்னும் வலிமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தால் ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ் கூடாரமே முஸ்லீமாக மதம் மாறி இருக்கும்” அரசியல்-அதிகாரம்-பொருளாதார பலன் கிடைக்குமெனில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்கள் வரலாறு அப்படிப்பட்டது " எனப் பதிவாகி இருக்கிறது.
திருமுருகன் காந்தி "ஆர்.எஸ்.எஸ் கூடாரமே முஸ்லீமமாக மதம் மாறி இருக்கும் " எனக் கூறியதை " இந்துக்கள் முஸ்லீமாக மாறுவார்கள் " என திரித்து நம் டிவி முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.
நான் எழுதியதை பொய்யாக திரித்து ‘நம்டிவி’ எனும் பெயரில் செய்தி பரப்பி கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். நோய் நெருக்கடியிலும் பொய்-வதந்தியை மட்டுமே பரப்புகிறார்கள். இதை தொடர்ந்து செய்வார்களெனில் சட்டரீதியான எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
உண்மையை எடுத்து செல்ல பகிருங்கள்(கீழே- என் ட்வீட்) https://t.co/OcMEF48oFW pic.twitter.com/KQyTQlsGsH
— Thirumurugan Gandhi (@thiruja) April 22, 2020
Twitter link | archive link
ஏப்ரல் 22-ம் தேதி திருமுருகன் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில், " நான் எழுதியதை பொய்யாக திரித்து ‘நம்டிவி’ எனும் பெயரில் செய்தி பரப்பி கொண்டிருக்கிறார்கள். நோய் நெருக்கடியிலும் பொய்-வதந்தியை மட்டுமே பரப்புகிறார்கள். இதை தொடர்ந்து செய்வார்களெனில் சட்டரீதியான எதிர்கொள்ளவேண்டியிருக்கும். உண்மையை எடுத்து செல்ல பகிருங்கள்(கீழே- என் ட்வீட்) " என நம் டிவி முகநூல் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டை இணைத்து பதிவிட்டு இருக்கிறார்.
அரசியல் உள்நோக்கத்திற்காக ஒருவர் கூறியதை திரித்து வெளியிடுவதை அதிகம் கண்டு இருக்கிறோம். அதையே நம் டிவி முகநூல் பக்கத்திலும் செய்து இருக்கிறார்கள். திருமுருகன் காந்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை விமர்சித்து வெளியிட்ட கருத்தை ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிராக திசை திருப்பி உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.