யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து கோடிக்கணக்கான பணம் வாங்கியதாக ஒரு காசோலை படத்துடன் இணைத்து செய்திகள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. காசோலையில் இடம் பெற்றிருக்கும் எழுத்துரு வகை சீராக இல்லாமல் வேறு வேறாக அமைந்துள்ளது. ஒரு சில எழுத்துகள் தடித்தும் சில...
பரவிய செய்தி
திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து பெற்ற 10 கோடி ருபாய் நிதி!
விரிவான விளக்கம்
மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து கோடிக்கணக்கான பணம் வாங்கியதாக ஒரு காசோலை படத்துடன் இணைத்து செய்திகள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன.

காசோலையில் இடம் பெற்றிருக்கும் எழுத்துரு வகை சீராக இல்லாமல் வேறு வேறாக அமைந்துள்ளது. ஒரு சில எழுத்துகள் தடித்தும் சில எழுத்துகள் மெல்லியதாகவும் உள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் IFSC குறியீடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு SBI என்று ஆரம்பிக்கும் . இதில்DBI என்று குறிப்பிட்டுள்ளது. IFS குறியீட்டை விளக்கும் ஒரு வலைத்தளத்தில் மாதிரி படத்தில் STATE BANK OF INDIA என்பதற்கு பதிலாக DEMO BANK OF INDIA என்று குறிப்பிட்டு இருந்ததை அப்படியே எடுத்து மாற்றாமல் வைத்துள்ளனர்.கொல்கத்தா என்று குறிப்பிட்டிருக்கும் முகவரியையும் அப்படியே எடுத்து வைத்துள்ளனர்.

மேக்னெட்டிக் மை எழுத்துக்களை அடையாளம் காணும் MICR ( Magnetic Ink Character Recognition ) எண் ஒவ்வொரு வங்கிக்கும் மாவட்டத்திற்கும் வேறுபடும். காசோலையில் கீழே குறிப்பிட்டுள்ள MICR-இல் இருக்கும் நகரம் / வங்கி / கிளை குறியீட்டு எண் 695002032. இது கேரளாவில் இருக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள SBI வங்கியின் குறியீட்டு எண்ணாகும். கொல்கத்தா வங்கி எண் இல்லை. இதையும் இன்னொரு மாதிரி காசோலை படத்தில் இருந்து எடுத்து இருக்கிறார்கள்.
அதிக தவறுகளுடன் எடிட் செய்யப்பட்ட இந்த காசோலை போலி என இதன் மூலம் தெரிகிறது.

சுருக்கமாக
இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் காசோலை எடிட் செய்யப்பட்டிருக்கிறது. இதில் தவறான செல்லாத குறியீடுகள் காணப்படுகின்றன.