
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர்.
1400 வருட பழமையான மண்டபம் மேல் வைக்க ASI அனுமதி பெற்றனரா?
நம்மாழ்வார் பாடிய கோவில் மண்டபத்தில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம்..@annamalai_k @SanghiPrince @p_nikumar @Panneer2057 pic.twitter.com/R1bjNswwik
— Arunachalam Karaikudiyar.. (BJP) (@KaraikudiBjp) June 16, 2022
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர்.
1400 வருட பழமையான மண்டபம் மைல் வைக்க ASI அனுமதி பெற்றனரா?
நம்மாழ்வார் பாடிய கோவில் மண்டபத்தில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம் pic.twitter.com/nPEXoMocU0
— சங்கத்தார் 🇮🇳 (@antaiyar1) June 17, 2022
Archive link
உண்மை என்ன ?
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை செல்போன் டவர் அமைத்து உள்ளதாக பரவும் புகைப்படம் குறித்து தேடுகையில், கூகுள் மேப் தளத்தில் கோவிலில் 2019 மற்றும் 2021-ல் இரும்பிலான கோபுரம் இருக்கும் புகைப்படங்களை காண முடிந்தது.


சில ஆண்டுகளுக்கு முன்பாக பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கூட கோவிலில் இரும்பிலான கோபுரம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. அதில், செல்போன் டவருக்கான கருவிகள் உள்ளிட்டவை ஏதும் இல்லை.ஒலிபெருக்கி மட்டுமே கட்டப்பட்டு இருக்கிறது.
“திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர்.
நம்மாழ்வார் பாடிய கோவிலில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம்”
என்று வாட்ஸ் அப் செய்திகள் பகிரப்படுகிறது.
இது உண்மையல்ல.
கோபுர பாதுகாப்புக்காக 2014 ஆம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் பொருத்தப்பட்ட இடிதாங்கி கோபுரமாகும். pic.twitter.com/KPzkQ0sjZ8
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 21, 2022
Twitter link | Archive link
