YouTurn

எம்.பி திருமாவளவன் காலிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கியதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !

எம்.பி திருமாவளவன் காலிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கியதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

"காலிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷம் போட்ட திருமாவளவன், எப்போது கைது செய்யப்படுவார் ?



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் மற்றும் எம்.பி ரவிக்குமார் ஆகிய இருவரும் கலந்து கொண்ட போது, " காலிஸ்தான் ஜிந்தாபாத் " எனும் முழக்கமிட்டதாகவும், காலிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்ட திருமாவளவன் எப்போது கைது செய்யப்படுவார் என தமிழக பாஜகவின் இளைஞரணியின் சமூக வலைதளங்களில் இவ்வீடியோ பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.





மாரிதாஸ் காணொளிகள்(ரசிக பக்கம்) எனும் முகநூல் பக்கத்திலும், திருமாவளவனைக் குறிப்பிட்டு வெளியான 2 நிமிட வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பாஜக கட்சியினர் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் இவ்வீடியோவை அதிகம் பகிர்ந்து வைரல் செய்து வருகிறார்கள்.



Facebook linkArchive link 

திருமாவளவன் காலிஸ்தான் ஜிந்தாபாத் எனும் முழக்கமிட்டதாகவும், அவரைக் கைது செய்வார்களா எனக் கேள்வி எழுப்பியதும், பரப்புவதும் யாரென்றால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக இளைஞரணியும், அவர்களின் ஆதரவாளர்களுமே.

உண்மை என்ன ?

பிப்ரவரி 11-ம் தேதி எம்.பி ரவிக்குமார், " டெல்லி-ஹரியானா எல்லையில் டிகிரி பகுதியில் லட்சக்க்கணக்கில் கூடி போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை தலைவர் எழுச்சித் தமிழரும் நானும் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அந்தக் காட்சிகளை இந்த வீடியோவில் பாருங்கள் " என போராட்டத்தில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.



Twitter link | Archive link

வைரல் செய்யப்படும் 2 நிமிட வீடியோவில் எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் அருகே நிற்பவர்கள், " முதலில் ஜீதேங்கே ஜீதேங்கே (வெல்வோம் வெல்வோம்) என்று முழக்கமிடுகிறார்கள். பின்னர், விவசாயிகள் ஒற்றுமை வாழ்க என்பதைக் குறிக்கும் (Kishan Ektha zindabad - கிசான் ஏக்தா ஜிந்தாபாத்) கிசான் ஏக்தா.. ஜிந்தாபாத் எனத் தொடர்ந்து அதே முழக்கத்தை எழுப்பி இருக்கிறார்கள். மூதாட்டி ஒருவர் கிசான் ஏக்தா எனத் தெளிவாய் உச்சரிப்பதை கேட்க முடிகிறது. சிலர் கிசான் ஏக்தா என உச்சரிப்பை இணைத்து கூறுவது போல் உள்ளது.

கிசான் ஏக்தா ஜிந்தாபாத் எனும் முழக்கம் விவசாயிகள் போராட்டம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒற்றுமைக்கான வார்த்தையே. திருமாவளவன் அருகே நிற்பவர்கள் ஜீதங்கே ஜீதங்கே, கிசான் ஏக்தா ஜிந்தாபாத் உள்ளிட்ட முழக்கங்களையே எழுப்பி இருக்கிறார்கள், காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று அல்ல.

மேலே மேடையில் இருப்பவர்கள் இன்குலாப் ஜிந்தாபாத், பாசிசத்திற்கு எதிரான மற்றும் விவசாயிகளின் உரிமை குறித்த முழக்கங்களையும் மற்றும் பஞ்சாபி மொழியில் பேசியும், முழக்கங்களையும் எழுப்பி இருக்கிறார்கள். இதுகுறித்து, பஞ்சாபி மொழி அறிந்தவர்களிடம் கேட்கையில், வீடியோவில் பஞ்சாபி மொழியிலும் கூட காலிஸ்தான் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என நமக்கு தெரிவித்தனர்.



எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக தமிழ் சமயம் வெளியிட்ட செய்தியில் வைரலாகும் வீடியோ காட்சியில் இடம்பெற்ற பகுதி இடம்பெற்று இருக்கிறது. அதிலும், கிசான் ஏக்தா.. ஜிந்தாபாத் என முழக்கமிடுவதை தெளிவாய் கேட்க முடிகிறது.

ஒருவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் இடத்தில் காலிஸ்தான் ஆதரவு முழக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் சர்ச்சையாகி, செய்திகள் அனைத்திலும் விவாதமாகி இருந்து இருக்கும். ஆனால், எந்தவொரு செய்தியிலும் அவ்வாறான முழக்கம் எழுந்ததாக வெளியாகவில்லை.

வைரலாகும் வீடியோ குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் அவர்களுக்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் தெரியப்படுத்தி இருந்தோம். அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. அவர் பதில் அளிக்கும் பட்சத்தில், அதையும் இணைக்கிறோம்.

மேலும் படிக்க : செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றியதாக வதந்தி !

இதற்கு முன்பாக, விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுந்ததாகவும், டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றியதாக வதந்திகளைப் பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களா ?

முடிவு : 

நம் தேடலில், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த தமிழக எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் காலிஸ்தான் ஜிந்தாபாத் எனும் முழக்கமிட்டதாகக் கூறும் தகவல் தவறானது. வீடியோவில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்கிற வார்த்தை இடம்பெறவில்லை. மாறாக கிசான் ஏக்தா ஜிந்தாபாத் என்கிற முழக்கத்தை காலிஸ்தான் என தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க