YouTurn

எம்பி திருமாவளவன் வெளியிட்ட புத்தகத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பும் வலதுசாரிகள் !

எம்பி திருமாவளவன் வெளியிட்ட புத்தகத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பும் வலதுசாரிகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மதம்,இனம்,மொழி அடிப்படையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ,வெறுப்போ கொள்ளமாட்டேன்னு அரசியல் அமைப்பு மேல சத்திய பிரமாணம் எடுக்குறவனுங்க செய்யுற செயலா இது ? அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளனர்.



Archive link 

விரிவான விளக்கம்

சென்னை குமணன் சாவடியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்கள் சேர்ந்து இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். அதில் அரபுகள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என எழுதியிருந்ததாகவும், அது இந்துக்களுக்கு எதிராக உள்ளதாகவும் வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.





உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அந்தப் புகைப்படத்தைப் பற்றித் தேடிய பொழுது, அந்த நிகழ்வு 2022ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி சென்னையின் குமணன் சாவடியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக நடந்த பாசிசம் முறியடிப்போம் எனும் மாநாட்டில் வெளியானதாகத் தெரியவந்தது.



அந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகிய இருவரும் சேர்ந்து இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகத்தை வெளியிட்டனர். இந்த நிகழ்வின் வீடியோ வினவு யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் 2 மணி 42 நிமிடங்கள் கழித்து இந்தப் புத்தகத்தை வெளியிடும் தருணம் பதிவாகி உள்ளது. அதிலும் அரபுகள் நாம் என்ற வார்த்தை எங்கும் இல்லை.



Facebook link

மேலும், புத்தக வெளியீட்டின் புகைப்படத்தை எம்பி திருமாவளவனும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் அரபுக்கள் நாம் என்ற வார்த்தை இல்லை.





இது வலதுசாரிகளால் பரப்பப்படும் செய்தி பொய் பரப்புரை எனத் திருமாவளவன் மற்றும் ஜவாஹிருல்லா இருவரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் புத்தகத்துடன் வீடியோ பதிவிட்டு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், எம்பி திருமாவளவன் அரபுக்கள் நாம் இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகத்தை வெளியிடுவதாகப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என வெளியிடப்பட்ட புத்தகத்தில் எடிட் செய்து பொய் பரப்புரையை செய்கின்றனர் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க