YouTurn

தேவர் சமூகம் பற்றி கே.பி. முனுசாமி, பழனிச்சாமி கூறியதாக பரவும் போலி செய்திகள் !

தேவர் சமூகம் பற்றி கே.பி. முனுசாமி, பழனிச்சாமி கூறியதாக பரவும் போலி செய்திகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வன்னியர்கள் ஒன்றும் குற்றப் பரம்பரையினரோ காட்டை விற்றே கள்ளுக் குடித்த கூட்டமோ அல்ல. உண்மையான பாட்டாளிகள். உள் ஒதுக்கீடு என்பது அவர்களது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் - கே.பி.முனுசாமி (அ.தி.மு.க)



முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் - எடப்பாடி பழனிச்சாமி.

விரிவான விளக்கம்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்பில்லை 10.5% உள்ஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றது.

இந்நிலையில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தேவர் மற்றும் வன்னியர் சமூகத்தை ஒப்பிட்டு 10.5% உள்ஒதுக்கீடு குறித்து பேசியதாக லோட்டஸ் செய்தி எனும் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது எடிட் செய்து பரப்பப்பட்ட போலிச் செய்தியே.

கே.பி. முனுசாமி இரு சமூகத்தை ஒப்பிட்டு அப்படி ஏதும் பேசவில்லை மற்றும் லோட்டஸ் செய்தி பக்கமும் அப்படி எந்தவொரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை. வேண்டுமென்றே, யாரோ தவறாக எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள்.

அடுத்ததாக, முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ் 18 தமிழ் உடைய பழைய நியூஸ் கார்டில் எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.

தேர்தல் தருணத்தில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசியதாக போலியான கருத்துக்களை நியூஸ் கார்டுகளில் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கி விட்டனர். சாதி மோதலை தூண்டும் விதத்திலும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆகையால், சமூக வலைதளங்களில் பகிரும் செய்தியின் உண்மை அறிந்து பகிரவும்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க