YouTurn

200 வருட பழமையான வங்கதேச காளி கோயில் எரிக்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்திகள்!

200 வருட பழமையான வங்கதேச காளி கோயில் எரிக்கப்பட்டதாகப் பரவும் தவறான செய்திகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள கடையில் நெருப்பு வைக்கப்பட்டதை, காளி கோவிலுக்கு நெருப்பு வைத்ததாகக் கூறி இரண்டு நாட்களாக வலதுசாரிகள் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

மவுல்வி பஜார் பங்களாதேஷ் 200 வருட காளி கோவில் தீ வைத்து எரிப்பு

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 04) ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 91 பேர் கொல்லப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோா் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள 200 வருட பழமையான காளி கோவிலுக்கு தீ வைக்கப்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் இரண்டு நாட்களாக வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை ‘Sagor Dash’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ மூலம் அறியமுடிந்தது. 


மேலும் வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள 200 வருட பழமையான காளி கோவிளுக்கு தீ வைக்கப்பட்டதாக இரண்டு நாட்களாக வலதுசாரிகள் புகைப்படம் ஒன்றை பரப்பி வரும் நிலையில், ‘Sagor Dash’ என்ற ஃபேஸ்புக் பயனர், காளி கோவில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி நேற்று (ஆகஸ்ட் 05) இரவு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


இதே போன்று, காளி கோவிலில் தீ வைக்கப்படவில்லை, கோவிலின் முன்புதான் நான் இருக்கிறேன் என்று கூறி,  ‘Sonjiy Dash’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலின் தற்போதைய புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.  


இதன்மூலம் வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள கடையில் நெருப்பு வைக்கப்பட்டதை, காளி கோவிலுக்கு நெருப்பு வைத்ததாகக் கூறி இரண்டு நாட்களாக வலதுசாரிகள் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், 200 வருட பழமையான வந்கதேச காளி கோவில் எரிக்கப்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க