YouTurn

போதையில் சாலையின் நடுவே உட்கார்ந்து சாப்பிட்ட அதிமுக பிரமுகர் ?

போதையில் சாலையின் நடுவே உட்கார்ந்து சாப்பிட்ட அதிமுக பிரமுகர் ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

அதீத போதையில் நெடுஞ்சாலையின் நடுவே வெள்ளை கோட்டில் அமர்ந்து இருவர் பிரியாணி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவை வைத்து டிக்டாக் வீடியோக்கள் கூட செய்து வைரலாகி இருந்தனர். போக்குவரத்து அதிகம் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் நடுவே போதையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும்...

பரவிய செய்தி

தேவதானப்பட்டி அருகே மது போதையில் நடுரோட்டில் அமர்ந்து சாப்பாடு சாப்பிட்ட அதிமுக பிரமுகரால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விரிவான விளக்கம்

தீத போதையில் நெடுஞ்சாலையின் நடுவே வெள்ளை கோட்டில் அமர்ந்து இருவர் பிரியாணி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவை வைத்து டிக்டாக் வீடியோக்கள் கூட செய்து வைரலாகி இருந்தனர்.

போக்குவரத்து அதிகம் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் நடுவே போதையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் இருவரும் அதிமுக பிரமுகர்கள் எனக் கூறும் மீம் பதிவை ஃபாலோயர் ஒருவர் அனுப்பி, இதன் உண்மைத்தண்மையை கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

திமுக பிரமுகரா ? 

வைரலான வீடியோ குறித்து தேடிய பொழுது கதிர் நியூஸ் என்ற இணையதளத்தில், " நடுரோட்டில் தலை வாழை இலை போட்டு பிரியாணி சாப்பிட்ட திமுக பிரமுகர்-அரசை மணி நேரத்தில் ஆடிப்போன பொதுமக்கள் " என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தனர்.



" நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டு போக்குவரத்து இடைஞ்சல் செய்த திமுக பிரமுகர் கைது " என செய்தித்தாள் புகைப்படங்களுடன் ஏகே அரசு என்பவரின் முகநூல் கணக்கில் பதிவாகி இருந்தது.



அந்த செய்தியில் உள்ள தலைப்பை வைத்து தேடிய பொழுது தந்தி செய்தி என அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், தந்தி டிவி இணையதளத்தில் " குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது " என்ற தலைப்பிலேயே செய்தி வெளியாகி இருக்கிறது.



அதிமுக என்ற இடத்தி " அ  " எழுத்தை தூக்கிவிட்டு திமுக என மாற்றி உள்ளனர். மேலும், தந்தி நாளிதழின் உண்மையான செய்தியும் நமக்கு கிடைத்தது.



நடந்தது என்ன ? 

தேனி மாவட்டத்தின் பெரியகுளம் அருகே தேவதனாப்பட்டி வீருநாகம்மாள் கோவில் அருகே குடிபோதையில் 2 பேர் நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டு உள்ளனர். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் அருகே வாகனங்கள் செல்லும் காட்சிகளும் புகைப்படங்களாக உள்ளன.



அவ்விருவரும் நடுரோட்டில் செய்த காரியத்தை சுற்றி  இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அவர்களை அகற்ற முயன்ற தங்கேஸ்வரன் என்பவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் செய்தியில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, அவர்களின் மீது காவல் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.



" போதையில் சாலையில் இடையூறுகளை செய்தவர்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி அதிமுக கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பெருமாள் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என தெரிய வந்துள்ளதாக முதன்மை செய்திகளில் குறிப்பிட்டு உள்ளனர். இதில், பெருமாளை போலீசார் கைது செய்து உள்ளனர், சுரேசை தேடி வருகிறார்கள் ".
முடிவு : 


நமக்கு கிடைத்த தகவலின்படி, தேவதானப்பட்டி பகுதியில் போதையில் சாலையின் நடுவே அமர்ந்து உணவு சாப்பிட்டவர் அதிமுக பிரமுகர் என அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், திமுக பிரமுகர் என திரிந்து செய்திகளை வெளியிட்டு பரப்பி வருவதை பார்க்க முடிந்தது.


எந்த கட்சியாக இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு இடையூறுகளை அளிக்கவே செய்கின்றனர் என்பதற்கு தமிழகத்தில் ஏராளமான உதாரணங்களை சொல்லலாம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.