YouTurn

இந்தியா டி20 உலகக்கோப்பை வென்றதை இந்தியாவிற்குள் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்களே விரும்பவில்லை எனப் பரவும் வதந்தி!

இந்தியா டி20 உலகக்கோப்பை வென்றதை இந்தியாவிற்குள் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்களே விரும்பவில்லை எனப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இதே வீடியோ “இந்தியா டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்றதை வங்காளதேச ரசிகர்கள் (Bangladesh Fans) விரும்பவில்லை” என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

பரவிய செய்தி

ரோஹிங்கியா முஸ்லீம்களைப் பாருங்கள்… இந்தியாவிற்கு அகதியாக வந்து இந்திய சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள்… ஆனால் இந்தியா வெற்றியடைந்தால் அழுகிறார்கள்…

                                                        

X Link | Archieve Link

விரிவான விளக்கம்

மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிற்குள் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்களே, இந்தியா டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்றதை விரும்பவில்லை என்று கூறி, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் சிலர் வருத்தமாக எழுந்து நிற்பது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இதே வீடியோ “இந்தியா டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்றதை வங்காளதேச ரசிகர்கள் (Bangladesh Fans) விரும்பவில்லை” என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

இது குறித்து மேலும் தேடியதில், சமூக ஊடகங்களில் பரவி வரும் இதே வீடியோ “Bangladesh Vs Southafrica” T20 கிரிக்கெட் போட்டியின் போது எடுக்கட்டது என்று குறிப்பிட்டு “বাংলার ছেলে” என்ற எக்ஸ் பக்கத்தில் ஜூன் 17 அன்றே பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் டி20 கிரிக்கெட் இறுதி உலகக் கோப்பை போட்டி ஜூன் 29 அன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இது டி20 கிரிக்கெட் இறுதி உலகக் கோப்பை போட்டியின் போது எடுக்கப்பட்டதல்ல என்பது தெளிவாகிறது.

மேலும் “Sadik Jomadder Rifat” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த போட்டியில் வங்காளதேசம் தோல்வியுற்றதால்,  வங்காளதேச ரசிகர்கள் சோகமுற்றனர் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களோடு, இந்த வீடியோவை ஒப்பீடு செய்து பார்த்ததில், இரண்டும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.

இதன் மூலம், வைரலாகும் வீடியோவில் இருப்பவர்கள் வங்கதேசத்தை சார்ந்தவர்கள் என்பதையும், இந்தியாவில் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் அல்ல என்பதையும் அறிய முடிகிறது. மேலும் பரவி வரும் வீடியோ டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்டதல்ல. “Bangladesh Vs Southafrica” T20 கிரிக்கெட் போட்டியின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.

முடிவு:

நம் தேடலில், இந்தியா இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை வென்றதை, இந்தியாவிற்குள் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்களே விரும்பவில்லை எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க