யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் உள்ள திரையரங்கு ஒன்றில் ’Captain America: Brave New World’ ஓடிக்கொண்டிருக்கையில் மேற்கூரை இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
பரவிய செய்தி
அர்ஜென்டினா: FINAL DESTINATION BLOODLINES படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, தியேட்டரின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி.

விரிவான விளக்கம்
திரையரங்கு ஒன்றின் இடிபாடுகளுக்கு நடுவில் மீட்புப்பணி வீரர் ஒருவர் நிற்கும் புகைப்படத்தை கொண்டு, அர்ஜென்டினா நாட்டில் ’FINAL DESTINATION BLOODLINES’ என்ற திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக ’Sun News’ செய்தித்தொலைக் காட்சி அதன் சமூக வலைத்தளத்தில் News Card ஒன்றை பதிவிட்டுள்ளது.
உண்மை என்ன?
News Card-ல் உள்ள புகைப்படத்தை ’Reverse Image Search’ முறையில் தேடுகையில், ’Newser’ என்ற செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. ‘கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வாஷிங்டன் நகரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் ’Captain America: Brave New World’ என்ற திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கையில் மேற்கூரை இடிந்து விழுந்ததாக’ அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த பிப்ரவரி 27 அன்று ‘NBC NEWS’ செய்தித்தளத்திலும் இந்த சம்பவம் குறித்த செய்தி வெளிவந்திருக்கிறது.
மேலும், ‘FINAL DESTINATION’ படத்தின் போது மேற்கூரை இடிந்து விழுந்தது குறித்து இணையத்தில் தேடியதில், ‘Daily Mail Online’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியை காணமுடிந்தது. மே 22ஆம் தேதி வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘அர்ஜென்டினா நாட்டில் லா பிளாட்டா என்ற நகரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் ’FINAL DESTINATION BLOODLINES’ ஓடிக்கொண்டிருந்த போது திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்த’ சம்பவம் குறித்து வெளியிடப்பட்டிருக்கிறது.

அர்ஜென்டினாவில் திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக சொல்லப்படும் செய்தி உண்மைதான், ஆனால் அதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படம் மூன்று மாதங்கள் பழைய புகைப்படமாகும். மேலும் பரவி வரும் படத்தில் 'Representational Image' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டன் நகரத்தில் திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தின் போது எடுக்கபட்ட புகைப்படத்தை, தற்போதை நடந்த அர்ஜென்டினா சம்பவத்திற்காக தவறாக பயன்படுத்தியுள்ளது Sun News தொலைக்காட்சி.