YouTurn

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தை பார்த்து யோகி ஆதித்யநாத் அழுததாகப் பரவும் பழைய வீடியோ !

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தை பார்த்து யோகி ஆதித்யநாத் அழுததாகப் பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

காஷ்மீர் கோப்புகள் திரைப்படத்தை பார்த்து அழுத யோகி ஜி.



facebook link 

விரிவான விளக்கம்

சமீபத்தில் வெளியான " தி காஷ்மீர் ஃபைல்ஸ் " திரைப்படத்தை பார்த்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழுததாக 17 நொடிகள் கொண்ட வீடியோ இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

நிகழ்ச்சி ஒன்றை அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத் கண்ணீர் விடும் காட்சி குறித்து கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடுகையில், 2017 அக்டோபர் மாதம் பஞ்சாப் கேசரி எனும் இணையதளத்தில், வீடியோவில் இருக்கும் யோகி ஆதித்யநாத் புகைப்படம் பதிவாகி இருக்கிறது.



2017 அக்டோபர் மாதம் கோரக்பூரில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட போது கண்ணீர் விட்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



தி காஷ்மீர் ஃபைல் திரைப்படத்திற்கு திரிபுரா, குஜராத், ஹரியானா, அசாம் போல உத்திரப்பிரதேச மாநிலத்திலும் வரி விலக்கு அளிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார். ஆனால், யோகி ஆதித்யநாத் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்து அழுததாக செய்திகளோ அல்லது படங்களோ வெளியாகவில்லை.

முடிவு : 

நம் தேடலில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்து யோகி ஆதித்யநாத் அழுததாக பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோ 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க