YouTurn

"தி எகனாமிஸ்ட்" வெளியிட்ட கார்டூனை எடிட் செய்து பரப்பும் ஸ்ரீராம் சேஷாத்ரி !

"தி எகனாமிஸ்ட்" வெளியிட்ட கார்டூனை எடிட் செய்து பரப்பும் ஸ்ரீராம் சேஷாத்ரி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியாவிற்கான நேரம், பிரதமர் மோடி மீது உலகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது - தி எகனாமிஸ்ட்



Archive link 

விரிவான விளக்கம்

" தி எகனாமிஸ்ட் " எனும் பத்திரிகை " பிரதமர் மோடி மீது உலகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது " என பழைய வாகனங்களுக்கு மேலே பிரதமர் மோடி எலெக்ட்ரிக் வாகனத்தில் பரப்பது போன்ற கார்டூனை வெளியிட்டு இருப்பதாக பாஜக ஆதரவாளர் ஸ்ரீராம் சேஷாத்ரி என்பவர் ட்விட்டர் பக்கத்தில், " நம்ம D Stock கதறல்கள் அதிகமாகுமே, இடது சாரி பத்திரிகை ஆன "The Economist" கூட சங்கி பத்திரிகை ஆனா எங்களுக்கு போக்கிடம் " என பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ? 

ஸ்ரீராம் சேஷாத்ரி என்பவர் பகிர்ந்த கார்டூன் செய்தியை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " மே 12-ம் தேதி தி எகனாமிஸ்ட் வெளியிட்ட உண்மையான செய்தி கிடைத்தது.



Archive link 

தி எகனாமிஸ்ட் பத்திரிகை, " விதி, மரபு மற்றும் நடைமுறை முடிவுகள் இந்தியாவிற்கு வரும் வருடங்களில் ஒரு புதிய வாய்ப்பு உருவாகி உள்ளது. வீண்விரயம் செய்வதா இல்லையா என்பது நரேந்திர மோடியின் கையில் உள்ளது " எனக் கூறி "இந்தியாவிற்கான நேரம், மோடி ஊதி தள்ளுவாரா ? என இடம்பெற்ற கார்டூனை வெளியிட்டு இருக்கிறது.



தி எகனாமிஸ்ட் பிரதமர் மோடி பற்றி "india moment will modi blow it? " என வெளியிட்ட கார்டூனில் " india moment world has great faith in pm modi " என போலியாக எடிட் செய்து தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், தி எகனாமிஸ்ட் எனும் பத்திரிகை பிரதமர் மோடி மீது உலகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது என வெளியிட்டதாகப் பரப்பப்படும் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க