YouTurn

லாகூரில் குண்டுவெடிப்பு என தவறான வீடியோவை வெளியிட்ட தந்தி டிவி!

லாகூரில் குண்டுவெடிப்பு என தவறான வீடியோவை வெளியிட்ட தந்தி டிவி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“லாகூரில் குண்டுவெடிப்பு - பரபரப்பு காட்சிகள்” என்று கூறி தந்தி டிவி வெளியிட்டுள்ள வீடியோ, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் விமானம் விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.

பரவிய செய்தி

ஒரு இரவுக்கு தாங்குமா பாகிஸ்தான்; லாகூர் சிதறிய காட்சிகள் - தந்தி டிவி


X Link | Archive Link

விரிவான விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்த நிலையில், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஏப்ரல் 08) இரவு இந்தியாவின் மேற்கு எல்லைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில, “லாகூரில் குண்டுவெடிப்பு - பரபரப்பு காட்சிகள்” என்று கூறி தந்தி டிவி ஊடகம் நேற்று (ஏப்ரல் 08) இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ “லாகூர் சிதறும் காட்சி” என்று குறிப்பிட்டு பல சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பப்படுவதையும் காணமுடிகிறது.




உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது நடைபெற்று வரும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையோடு தொடர்புடைய வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


“The Truth Lies” என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ “பிலடெல்பியாவில் விமானம் விபத்துக்குள்ளான காட்சி” என்று குறிப்பிட்டு கடந்த பிப்ரவரி 02 அன்றே பதிவு செய்யப்பட்டிருந்தது.



இதே போன்று “joe.kendra” என்ற 'threads' பக்கத்திலும் இது அமெரிக்காவின் பிலடெல்பியாவில் விமானம் விபத்துள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு 2025 பிப்ரவரி 01 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. 



எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில், “6abc Philadelphia” ஊடகத்த்தின் யூடியூப் பக்கத்தில் “அமெரிக்காவின் பிலடெல்பியா விமான விபத்துக்குப் பிறகு எடுக்கட்டப்பட்ட காட்சி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவின் காட்சிகள் பரவி வரும் வீடியோவோடு ஒத்துப் போகின்றன. 



இதன் மூலம் பரவி வரும் வீடியோ, கடந்த பிப்ரவரி 2025-ல் இருந்தே “அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் விமானம் விபத்துக்குள்ளான காட்சி” என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், “லாகூரில் குண்டுவெடிப்பு - பரபரப்பு காட்சிகள்” என்று கூறி தந்தி டிவி வெளியிட்டுள்ள வீடியோ, பென்சில்வேனியாவில் விமானம் விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க