YouTurn

ராமர் கோவில் திறப்பிற்கு இத்தாலியப் பிரதமர் வாழ்த்து கூறும் வீடியோ எனப் பரவும் பொய் !

ராமர் கோவில் திறப்பிற்கு இத்தாலியப் பிரதமர் வாழ்த்து கூறும் வீடியோ எனப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு இந்துக்களுக்கு இத்தாலிய பிரதமர் செய்தி..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

யோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இந்நிலையில் இத்தாலிய பிரதமரான ஜியார்ஜியா மெலோனி ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று கூறி 12 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து இத்தாலிய பிரதமரான ஜியார்ஜியா மெலோனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் இதே வீடியோவை கடந்த ஜனவரி 15 அன்றே "நன்றி, நீங்கள் தான் என்னுடைய பலம்" என்று குறிப்பிட்டு தனது பக்கத்தில் பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.



ஆனால் அந்த வீடியோவில் அவர் இத்தாலிய மொழியில் பேசியிருந்ததால், அவரது வீடியோவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆய்வு செய்தோம். அதில், "சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. உண்மையில் இது நிறைய ஊக்கத்தை அளித்தது, நான் இதையெல்லாம் பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன். நீங்களே என்னுடைய பலம். உங்களுக்கு என்னுடைய அன்புகள்." என்று அதில் அவர் பேசியிருந்ததை அறிய முடிந்தது.

[video width="720" height="900" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/01/translatemom.mp4"][/video]

இதில் அவர் எந்த இடத்திலும் அயோத்தி ராமர் கோவில் பற்றியோ, ராமர் கோவில் திறப்பிற்காக வாழ்த்து செய்தி பற்றியோ பேசவில்லை. இதை சிலர் தவறுதலாக பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: அண்டார்டிகாவில் ராமர் பிராண பிரதிஷ்டை கொண்டாட்டம் என எடிட் செய்த படத்தை வெளியிட்ட தினமலர் !

இதற்கு முன்பும் அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக பல செய்திகள் தவறாக பரப்பப்பட்டன. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: பூரி ஜெகன்நாதர் யாத்திரை கூட்டத்தின் படத்தை அயோத்தி எனப் பதிவிட்ட பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் !

முடிவு:

நம் தேடலில், ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு இத்தாலியப் பிரதமர் இந்துக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளதாகப் பரவி வரும் வீடியோ தவறானது என்பதையும், அது தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க