
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மேலும் அந்த வீடியோவில், கோவிலின் தரைத்தளத்தை சிலர் உளியைப் பயன்படுத்தி உடைப்பது போன்றும், கோவிலைச் சுற்றி புதிய செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.
அந்த கோயிலின் சிறப்பே அதன் கட்டுமானம் தான்...
தரைதளம் வெரும் செங்கலால் ஆனாது ஆனால் அதையே உடைக்க முடியமால் உளியை பயன்டுத்துகிறிர்கள்.
வேணாண்டா சோழன் பெரும் கோவக்காரன் @Seeman4TN pic.twitter.com/DfOfRTYBhL
— Savukku Shankar Army (@Mahi1987Mass) January 28, 2024
அந்த கோயிலின் சிறப்பே அதன் கட்டுமானம் தான்...
தரைதளம் வெரும் செங்கலால் ஆனாது ஆனால் அதையே உடைக்க முடியமால் உளியை பயன்டுத்துகிறிர்கள்.
வேணாண்டா சோழன் பெரும் கோவக்காரன் pic.twitter.com/Z3i8yMaiGs
— AK SANTHOSH ⚡ (@SanthoshAK_1991) January 29, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தஞ்சை பெரிய கோவிலில் பாராமரிப்பு பணிகள் குறித்து Behindwoods air தனது யூடியூப் பக்கத்தில் ஜனவரி 28 அன்று "'தஞ்சை கோயிலில் நொறுக்கப்படும் தரை'.. Archeology department போட்ட மாஸ்டர் பிளான்..! நடப்பது என்ன?" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த வீடியோவின் 29 வது வினாடியில் "இந்திய அரசு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, திருச்சி வட்டம், இங்கு பாராமரிப்பு பணி நடைபெறுகிறது" என்று குறிப்பிடப்பட்ட பேனர் ஒன்று தஞ்சை கோவிலில் கட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் தஞ்சைப் பெரிய கோவிலின் தரைத் தளத்தில் உள்ள பழைய செங்கற்களை அகற்றிவிட்டு, புதிய செங்கற்கள் பதிக்கும் பணியை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை செய்துவருகிறது என்பது உறுதியாகிறது.

இதே போன்று கடந்த 2018-லும் இந்திய தொல்லியல் துறை தஞ்சை பெரிய கோவிலில் பராமரிப்பு பணிகளை செய்துள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதற்காக அப்போதே Youturn குழு தஞ்சைக் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக அந்த சீரமைப்பு பணிக்கான மேற்பார்வையாளர் ராஜன் என்பவரிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசியபோது, சிற்பங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, நடைபாதை மட்டுமே சரிசெய்யப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட நடைப்பாதையில் மேடும் பள்ளமும் இருந்து கோவிலுக்கு வரும் மக்களுக்கு நடக்கையில் சிரமம் ஏற்படுகிறது. நடைப்பாதை சரிசெய்யப்பட்டு சீராக்கப்படும் என்றார். இது தொடர்பாக தொல்லியல் துறையை சேர்ந்தவர்களிடமும் அப்போதே பேசி இதன் உண்மைத்தன்மை குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க: தஞ்சைப் பெரிய கோவிலின் பராமரிப்பு பணி தொடர்பான சர்ச்சை..!
இதன் மூலம் பெரிய கோவிலில் நடைபெறும் பாராமரிப்பு பணியை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளவில்லை என்பதையும், கோவிலில் சீரமைப்பு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், தஞ்சை பெரிய கோவிலின் தரைத்தளத்தை தமிழ்நாடு அரசு சேதப்படுத்துவதாகப் பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
