YouTurn

தஞ்சைப் பெரியக் கோவில் கல்வெட்டுகளில் இந்தி திணிப்பா ?

தஞ்சைப் பெரியக் கோவில் கல்வெட்டுகளில் இந்தி திணிப்பா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தஞ்சைப் பெரியக் கோவிலில் தமிழ் மொழியில் இருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டும், கோவில் பகுதிகளில் புதிதாக செதுக்கப்பட்ட இந்தி மொழிக் கல்வெட்டுகள் திணிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களின் கோபத்தை தூண்டியது. தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் ஹிந்தி மொழியில் கல்வெட்டுகள் புதிதாக...

பரவிய செய்தி

தஞ்சைப் பெரியக் கோவிலில் இந்தி திணிப்பு அரங்கேறுகிறது.

விரிவான விளக்கம்

தஞ்சைப் பெரியக் கோவிலில் தமிழ் மொழியில் இருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டும், கோவில் பகுதிகளில் புதிதாக செதுக்கப்பட்ட இந்தி மொழிக் கல்வெட்டுகள் திணிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களின் கோபத்தை தூண்டியது.

தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் ஹிந்தி மொழியில் கல்வெட்டுகள் புதிதாக திணிக்கப்படுவதாக பரவிய செய்திகள் யாவும் உண்மை இல்லை. ஆம், பரவும் வீடியோக்கள், மீம் பதிவுகளில் இருக்கும் கல்வெட்டுகளில் இருக்கும் மொழி ஹிந்தி அல்ல. அதில், இருக்கும் மொழி மாராத்தி.

தஞ்சை ஓலைச் சுவடிகள் குறித்த தகவலை வீடியோவில் காண்க :



16 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தஞ்சைப் பகுதியை மராட்டியர்கள் ஆட்சிப் புரிந்த வரலாறும் உண்டு. அதில், மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் கோவிலில் நிகழ்ந்த சீரமைப்பு பணிகளின் போது அங்கு நிகழ்ந்தவை பற்றிய விவரங்கள் அந்த கல்வெட்டுகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது.



மராத்திய மொழியில் இருக்கும் கல்வெட்டுகளை இந்தி மொழிக் கல்வெட்டுகள், திணிக்கப்பட்ட கல்வெட்டுகள் என தவறாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். தஞ்சை பெரியக் கோவிலில் ஹிந்தி மொழியில் கல்வெட்டுகள் புதிதாக திணிக்கப்பட்டதாகவும் கூறுவதும் வதந்திகளே!

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.