YouTurn

ஆசியப் போட்டியில் தலைவாசல் விஜய் மகள் வென்ற வெள்ளிப் பதக்கம்| வைரலாகும் முகநூல் பதிவு !

ஆசியப் போட்டியில் தலைவாசல் விஜய் மகள் வென்ற வெள்ளிப் பதக்கம்| வைரலாகும் முகநூல் பதிவு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

பரவிய செய்தி

ஆசிய போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த, தமிழ் தலைவாசல் விஜய்யின் மகள். குவியும் பாராட்டுக்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர் குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய். திரைப்படங்களையும் தாண்டி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், இவர் நடிகராக இருந்த போதிலும் இவருடைய குழந்தைகளை விளையாட்டு வீரர், வீராங்கனையாக வளர்த்துள்ளார். இவரின் மகள் ஜெயவீணா மற்றும் ஜெயவந் குமார் ஆகிய இருவருமே நீச்சல் வீரர், வீராங்கனைகள். இதுவரை பல்வேறு நீச்சல் போட்டியில் பங்கேற்று பல தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளனர். தற்போது, தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா, நேபாளில் நடைபெற்ற 13 வது, தெற்கு ஆசிய , பிரேஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில், 50 மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.



விரிவான விளக்கம்

திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் அவர்களின் மகள் ஜெயவீணா ஆசியப் போட்டியில் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதாக தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரின் புகைப்படங்கள் அடங்கிய பதிவு ஒன்று முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து இப்பதிவை பகிர்ந்து வருகின்றனர்.





2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்ற 13-வது தெற்காசிய போட்டியில் பல நாடுகளில் இருந்தும் போட்டியார்கள் கலந்து கொண்டனர். தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.



தலைவாசல் விஜய் அவர்களின் மகன் ஜெய்வந் விஜய் குமாரும் நீச்சல் விளையாட்டு வீரரே. ராஞ்சியில் நடைபெற்ற 34-வது தேசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் ஜெய்வந் குமார் 4-வது இடத்தைப் பிடித்தார், ஜெயவீணா 4X 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் அணி போட்டியில் தமிழகத்திற்காக வெண்கலம் வென்றார் என குடும்பத்தினர் புகைப்படம் 2011-ம் ஆண்டு Getty image தளத்தில் வெளியாகி இருக்கிறது.



கடந்த ஆண்டு தலைவாசல் விஜய் மகள் தெற்காசிய போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்த செய்திகள் இணையதள செய்திகளில் வெளியாகி இருக்கின்றன. தற்போது ஜெயவீணாவிற்கும், தலைவாசல் விஜய்க்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து சமூக வலைதளங்களில் அவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க