YouTurn

தாய்லாந்து சுகாதார அமைச்சர் தடுப்பூசி போட அழுவதாக பரவும் தவறான வீடியோ !

தாய்லாந்து சுகாதார அமைச்சர் தடுப்பூசி போட அழுவதாக பரவும் தவறான வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தாய்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் தடுப்பூசி போட வந்த வேளையில் டாக்டர்கள் தடுப்பூசி போட முனைந்து போது அதனைத் தடுக்க படாத பாடும் அமைச்சர் அழுது புலம்பும் காட்சியே இது!



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தாய்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பூசி போட குழந்தை போல் அழுது பாடாய் படுத்துவதாக 2.38 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கிண்டலாக பகிரப்பட்டு வருகிறது.



கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள குழந்தை போல் அழும் தாய்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் என இவ்வீடியோ இந்திய அளவிலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ? 

தாய்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் குறித்து தேடும் போது, " அவரின் பெயர் அனுதின் சார்ன்விரகுல் என்றும், வைரலாகும் வீடியோவில் இருப்பது அவரல்ல " என்பதையும் அறிய முடிந்தது.



சீன மனிதர் முதல் முறையாக ஊசி செலுத்திக் கொள்ளும் போது பயப்படுவதாக இதே வைரல் வீடியோ 2018-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.



இந்த வீடியோ 3 கடந்த ஆண்டுகளுக்கு முன்பாக சீன சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவாகும். 2019-ம் டிசம்பரில் தான் சீனாவின் வுஹான் மாகாணத்தில் நோவல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வீடியோ அல்ல.

முடிவு :

நம் தேடலில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாய்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் குழந்தை போல் அழுது பயப்படுவதாக பகிரப்படும் வீடியோவில் இருப்பது தாய்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அல்ல, அந்த வீடியோ 3 ஆண்டுகளுக்கு முன்பாக சீன செய்திகளில் வெளியாகி இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க