YouTurn

பெண் வேடத்தில் வந்த தீவிரவாதி கைதா ?

பெண் வேடத்தில் வந்த தீவிரவாதி கைதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் உள்ள கோவில்களில் வெடிகுண்டுகள் வைத்து நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் சுற்றிவந்த தீவிரவாதியை பெங்களூரில் காவல்துறையினர் கைது செய்ததாகக் கூறி சில படங்கள் சமூக வலைதளத்தில் காணப்படுகிறது. கோவில்களில் குண்டு வைக்க பெண் வேடத்தில் வந்த தீவிரவாதி...

பரவிய செய்தி

கோவிலில் குண்டு வைக்க பெண் வேடத்தில் வந்த தீவிரவாதியை பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

விரிவான விளக்கம்

இந்தியாவில் உள்ள கோவில்களில் வெடிகுண்டுகள் வைத்து நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் சுற்றிவந்த தீவிரவாதியை பெங்களூரில் காவல்துறையினர் கைது செய்ததாகக் கூறி சில படங்கள் சமூக வலைதளத்தில் காணப்படுகிறது.


கோவில்களில் குண்டு வைக்க பெண் வேடத்தில் வந்த தீவிரவாதி எனக் கூறும் படமானது எகிப்து நாட்டில் குழந்தைக் கடத்துபவரை கைது செய்த படமாகும். கடந்த ஆகஸ்ட் மாதம், எகிப்து நாட்டில் பர்தா அணிந்து வந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து சோதனை செய்தனர். அவ்வாறு பொதுமக்களிடம் அகப்பட்டவர் உண்மையில் பெண் இல்லை. பெண் போல வேடமணிந்து குழந்தைகளை கடத்துபவன் என்று தெரியவந்ததும் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.


காவல்துறையின் விசாரணையின் போது அவன் எவ்வாறெல்லாம் உடையணிந்து உள்ளான் என்று விளக்கும் நோக்கத்தில் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை எடுத்து இந்திய கோவில்களில் வெடிகுண்டு வைக்க வந்த தீவிரவாதி என்று வதந்தியைப் பரப்பியுள்ளனர்.


பர்தா அணிந்து இருந்ததால் தீவிரவாதி என்றுக் கூறினால் அனைவரும் உண்மையென்று நம்பி அதிகம் பகிர்வார்கள் என்பதற்காகவோ அல்லது சில அமைப்புகள் வன்முறைகளை தூண்டுவதற்காகவோ இவ்வாறு செய்திருக்கலாம்.

சுருக்கமாக

எகிப்து நாட்டில் பெண் வேடமணிந்து குழந்தைக் கடத்துபவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க