YouTurn

பிற மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தினால் தடுப்போம் என அமித்ஷா கூறினாரா ?

பிற மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தினால் தடுப்போம் என அமித்ஷா கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சமஸ்கிருதம் தவிர்த்து தமிழில் குடமுழுக்கு, அர்ச்சனைகள் செய்யப்பபட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழக்கூடியவை. சமீபத்தில் கூட, தஞ்சைப் பெரியக் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் பாடல்கள் ஒலிக்க நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நீதிமன்றம் வரை சென்றது. இதன் பயனாய்...

பரவிய செய்தி

சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் - உள்துறை அமைச்சர் அமித்ஷா.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சமஸ்கிருதம் தவிர்த்து தமிழில் குடமுழுக்கு, அர்ச்சனைகள் செய்யப்பபட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழக்கூடியவை. சமீபத்தில் கூட, தஞ்சைப் பெரியக் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் பாடல்கள் ஒலிக்க நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நீதிமன்றம் வரை சென்றது.

இதன் பயனாய் தஞ்சைப் பெரியக் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது.

மொழி சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்ததே. உண்மையில், அமித்ஷா பிற மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் எனக் கூறியிருந்தால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்து இருக்கும்.



Facebook link | archived link  

ஆகையால், தந்தி டிவியின் முகநூல் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆராய்ந்து பார்க்கையில் பிப்ரவரி 4-ம் தேதி வெளியான செய்தியில், தேசிய அளவில் குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் திட்டம் தற்போது இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாக நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது. அதையே மாற்றி தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…