யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தாகத்துக்கு தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் நுழைந்த முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கிய பாஜக சங்கி !

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
" பாஜக ஆளும் உத்திரபிரதேசம் காஸியாபாத்தில் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் நுழைந்த முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கினார் பாஜக சங்கி.
எடுக்கப்பட்ட 24 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றியது. மக்களின் கண்டனத்தை அடுத்து சிறுவனை தாக்கிய பாஜக சங்கியை இப்போது கைது செய்தாலும் அந்த ஆள் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விரைவில் உபி முதல்வர் யோகி ஆதித் யநாத் தலையிட்டு அந்த சங்கியை விடுவிக்க உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது " எனும் நிலைத்தகவல் உடன் சிறுவன் உடலில் காயங்களுடன் இருக்கும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் கண்டனத்துடன் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உண்மை என்ன ?
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸியாபாத் பகுதியில் தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் சென்ற முஸ்லீம் சிறுவனை ஒருவர் தாக்கி எடுக்கப்பட்ட வீடியோ இந்திய அளவில் வைரலாகி கடும் கண்டனத்தைப் பெற்றது.
மேலும் படிக்க : தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் வந்த முஸ்லீம் சிறுவனை அடித்தவர் கைது !
வைரலான வீடியோ குறித்து நாமும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், சிறுவன் தாக்கப்படும் வீடியோவையும், சிறுவனை தாக்கி வீடியோ எடுத்த இருவரை காஸியாபாத் காவல்துறை செய்தது குறித்தும் வெளியிட்டு இருந்தோம்.

ஆனால், வைரலான வீடியோவில் இருந்த சிறுவனும், வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சிறுவனின் தோற்றமும் வேறாக இருப்பதை அறிய முடிகிறது. ஆகையால், காயத்துடன் இருக்கும் சிறுவனின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த மாதமே பிற நாட்டைச் சேர்ந்தவர்களின் முகநூல் பதிவுகளில் இடம்பெற்று இருக்கிறது.
Archive link
மேற்கொண்டு தேடுகையில், ஏமன் நாட்டின் அல் மக்வித் எனும் பகுதியில் தந்தை ஒருவர் தன் மகனை கொடூரமாக தாக்கியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக இப்புகைப்படத்துடன் கூடிய செய்தி cratersky.net எனும் இணையதளத்தில் 2020 அக்டோபர் மாதம் வெளியாகி இருக்கிறது.

" காஸியாபாத் பகுதியில் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்க வந்த சிறுவனை தாக்கியவர் பீகாரைச் சேர்ந்த ஷீரங்கி நந்தன் யாதவ் ஆவார். சிறுவனை தாக்கிய வீடியோவை முதலில் இந்து ஏக்தா சங்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. அதே கணக்கில், யாதவ் வேறொருவரை துன்புறுத்தும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
பீகாரில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பாக காஸியாபாத்திற்கு வந்த யாதவ், தஸ்னா தேவி கோவில் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு வலதுசாரி போதகரும் கோவிலின் பராமரிப்பாளருமான யதி நர்சிங்கானந்த் சரஸ்வதியின் சீடர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் " என போலீசார் அளித்த தகவல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ஷீரங்கி நந்தன் யாதவிற்கு தேவையான சட்ட உதவியை செய்வதாக கோவில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த அனில் யாதவ் தெரிவித்து இருக்கிறார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் கோவில் நிர்வாகிகள் ஜாமீன் பெறுவார்கள் என யதி நர்சிங்கானந்த் சரஸ்வதி கூறியதாக டவ்ன் இணையதளத்தில் மார்ச் 14-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியில் தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் சென்ற முஸ்லீம் சிறுவனை தாக்கிய பாஜக நபர் என பரப்பப்படும் சிறுவனின் புகைப்படம் தவறானது. ஏமன் நாட்டு சிறுவனின் புகைப்படத்தை தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
முஸ்லீம் சிறுவனை தாக்கியது தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்காக ஜாமீன் பெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஷீரங்கி நந்தன் யாதவ் வலதுசாரி ஆதரவாளர் என போலீஸ் தகவலின் மூலம் அறிய முடிகிறது. ஆனால், பாஜகவைச் சேர்ந்தவர் என எங்கும் கூறப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.