YouTurn

கோயிலில் குண்டு வைக்க முயற்சி செய்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி எனப் பரவும் எகிப்து புகைப்படம் !

கோயிலில் குண்டு வைக்க முயற்சி செய்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி எனப் பரவும் எகிப்து புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கோவிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி பெங்களூரில் கைது..

X link | Archive link 

விரிவான விளக்கம்

கோயிலில் குண்டு வைப்பதற்காக புர்கா அணிந்து வந்த இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்த ஆண் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



Archive link  Archive link 

உண்மை என்ன ?

பரவக் கூடிய புகைப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், அது 2017ம் ஆண்டு எகிப்தில் பெண் வேடமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிந்தது.

இது தொடர்பாக அரபிக் மொழியில் இயங்கக்கூடிய ‘Sharkia Today’ என்னும் தளத்தில் 2017, ஆகஸ்ட் 25ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது. அதில், எகிப்து கெய்ரோவில் உள்ள பிரபலமான மால் ஒன்றின் 8வது கேட்டுக்கு முன்னால் 90வது தெருவில் குழந்தையைக் கடத்த முயன்றவரை பொது மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். 



அந்நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர் பெண் வேடமிட்ட ஆண் என்பது தெரியவந்துள்ளது. அவர் குழந்தையைக் கடத்துவதற்கு முன்னர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். 

மேலும் ‘youm7’ என்னும் டிவிட்டர் பக்கத்திலும் பரவக் கூடிய படத்தினை 2017, ஆகஸ்ட் 26ம் தேதி பதிவிட்டுள்ளனர். அதிலும் பெண் வேடமிட்டு குழந்தையைக் கடத்த முயன்ற இளைஞர் அப்பகுதி மக்களால் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கும் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 



இவற்றில் இருந்து கோயிலில் குண்டு வைக்க புர்கா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ். நபர் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

மேலும் படிக்க : இந்து குழந்தையை புர்கா அணிந்த ஆண் கடத்துவதாகப் பரப்பப்படும் பொய் வீடியோ !

இதற்கு முன்னர் புர்காவுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கேரளா மாலில் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தவர் முஸ்லீம் எனப் பொய் பரப்பும் சரவண பிரசாத் !

முடிவு : 

நம் தேடலில், கோயிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி பெங்களூரில் கைது செய்யப்பட்டதாகப் பரவும் படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2017ம் ஆண்டு எகிப்தில் பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் குழந்தைகளைக் கடத்த முயற்சி செய்ததாகக் காவல் துறையினர் கைது செய்தபோது எடுக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க