யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொரோனா வைரஸ் என பொதுவாக அழைக்கப்படும் GOVID-19 வைரஸ் குறித்த பல்வேறு தவறான மற்றும் ஆதாரமில்லாத தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருக்காது...
பரவிய செய்தி
27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் உள்ள இடங்களில் கொரோனா வைரசால் வாழ முடியாது. அதிக வெப்பம் இருந்தால் கொரோனா வைரஸ் உயிர் வாழாது.

Facebook link | archived link

Facebook link | archived link
விரிவான விளக்கம்
கொரோனா வைரஸ் என பொதுவாக அழைக்கப்படும் GOVID-19 வைரஸ் குறித்த பல்வேறு தவறான மற்றும் ஆதாரமில்லாத தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருக்காது, ஏனெனில் இந்தியாவில் வருகிற கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் கொரோனா வைரசால் பரவ முடியாத சூழல் உருவாகும் என்ற தகவல்கள் இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. மேலும், 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருக்கும் பகுதியில் கொரோனா வைரசால் உயிர் வாழ முடியாது என்ற தகவலும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, " உடலில் இருந்து வெளியே வரும் வைரஸ் குறிப்பிட்ட வெப்பநிலையில் இருந்தால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும். 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் வைரசால் ஒரு வாரம் கூட இருக்க முடியும். அதுவே 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்றால் அவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியாது. அதற்காக உடலில் இருந்து வெளியே வந்த உடனே வைரஸ் இறந்து விடும் என்று அர்த்தமில்லை. கொரோனா வைரஸ் வெளிப்புறத்தில் அதிக நாட்கள் வாழ உகந்த வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கலாம். எனினும், 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் கொரோனா வைரஸ் உயிர் வாழ இயலாது என இன்னும் 100 சதவீதம் நிறுவப்படவில்லை. இன்னும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் நமக்கு கிடைத்த தரவுகள் எல்லாமே வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சீனா போன்ற நாடுகளை சேர்ந்ததே. அவர்கள் அளித்த தரவுகளின்படி, உடலில் இருந்து வெளியே வரும் வைரஸ் உலோக மேற்பரப்புகளில், பிற இடங்களில் 4-5 நாட்கள் வரை இருக்க வாய்ப்புகள் உள்ளது எனக் கூறுகின்றன. இவை அனைத்தும் அந்த நாட்டின் வெப்பநிலைக்கு ஏற்பவை. உடலுக்கு வெளியே உள்ள பகுதிகளில் 40-45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் பரவும் என்பதற்கும், பரவாது என்பதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை. இயல்பாகவே, மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது நம் நாட்டில் பிற வைரஸ் பரவல் குறைவாக இருக்கும். அதேபோல், இந்த வைரஸ் பரவலும் குறைவாக இருக்கலாம் என நினைக்கின்றனர். அதுவும் 100 சதவீதம் உறுதியாக கூற முடியாது " எனத் தெரிவித்து இருந்தார்.

" பொதுவாக, இருக்கும் இடத்தைப் பொறுத்து ஹியூமன் கொரோனா வைரசின் நோய்த்தொற்று 2 முதல் 9 நாட்களுக்கு இருக்கலாம். கொரோனா வைரஸ் குடும்பத்தில் உள்ள MERS வைரஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உலோக பரப்பில் 48 மணி நேரங்களுக்கு தாக்குப்பிடித்து இருக்கும். அதேபரப்பில் மற்றும் அதே வெப்பநிலையில் TGEV ஆனது 28 நாட்களுக்கு உயிர் வாழும். மற்றொரு ஆராய்ச்சியில், பேப்பரில் இருக்கும் இரு SARS வைரஸ்களில் ஒன்று 4-5 நாட்களுக்கும், மற்றொன்று வெறும் 3 மணி நேரத்திற்கு உயிர் வாழ்ந்ததாக" Medical news today-ல் வெளியாகி இருக்கிறது.
உடலுக்கு வெளியே 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருக்கும் பகுதியில் நோவல் கொரோனா வைரஸ் உயிர் வாழ இயலாது என இன்னும் 100 சதவீதம் நிறுவப்படவில்லை என்பதே உண்மை. அதன் வாழும் நேரம் வேண்டுமானாலும் குறையுமே தவிர, வெளியே வந்த உடனே இறந்து விடாது.
கொரோனா வைரசால் வெப்பமான பகுதிகளில் வாழ முடியாது என்ற தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கவில்லை. வெப்பமண்டல நாடுகளில் பலவற்றில் கூட கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகி உள்ளன. இருப்பினும், பொதுவாக கோடைகாலங்களில் சுவாச நோய்க்கிருமிகள் மறைந்துவிடுவதால், கொரோனா வைரசிற்கும் அப்படி சாத்தியமாகும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். எனினும், அதை நிரூபிக்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில்தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் (ICMR) தலைவர் பல்ராம் பார்கவா பிடிஐ-க்கு அளித்த தகவலில், நோவல் கொரோனா வைரஸ் பரவலில் காலநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்து உள்ளதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.
" வைரஸ் ஆனது குறைந்த வெப்பநிலையில் மட்டுமே பரவுகிறது என்ற கூற்றை மறுத்த பார்கவா, இதுபோன்ற கண்டுபிடிப்பு எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும், வெப்பநிலை குறைவுக்கும், வைரஸ் பரவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வைரஸ் காற்று வழியாக பரவுவதில்லை, ஆனால் மனித தொடர்பின் மூலம் பரவுகிறது. வானிலை மாற்றத்துடன் இருமல் மற்றும் சளிக்கு எதிராக தங்களை கவனித்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியும் உள்ளார் ".
இதேபோல், குளிர்ந்த காலநிலை மற்றும் பனியானது புதிய கொரோனா வைரசை கொல்லும் என்று பரவியத் தகவல் தவறானது என உலக சுகாதார மையம் தெரிவித்து இருந்தது.

இணையத்தில் பரவுவது போன்று 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் உள்ள பகுதிகளில் கொரோனா வைரசால் உயிர் வாழ முடியாது என ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேபோல், கொரோனா வைரஸ் பரவலில் வெப்பநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரே தெரிவித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

சுருக்கமாக
27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் உள்ள பகுதிகளில் கொரோனா வைரசால் உயிர் வாழ முடியாது என 100 சதவீதம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அது தவறாகவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா வைரஸ் பரவலில் வெப்பநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தாது என ஐசிஎம்ஆர் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.