யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடந்து முடிந்த தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. அம்மாநிலத்தில் 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி 88, காங்கிரஸ் 19 , AIMIM 7 , TDP 2 , பிஜேபி 1 தொகுதிகளை கைப்பற்றின. கல்வகுன்ட்ல சந்திரசேகர ராவ்...
பரவிய செய்தி
தெலங்கானா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 44 பேர் இளங்கலைப் பட்டம், 24 முதுகலைப்பட்டம், 2 பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளனர். அதிகம் படித்தவர்களின் கையில் பொறுப்பு சென்றுள்ளது.

விரிவான விளக்கம்
நடந்து முடிந்த தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. அம்மாநிலத்தில் 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி 88, காங்கிரஸ் 19 , AIMIM 7 , TDP 2 , பிஜேபி 1 தொகுதிகளை கைப்பற்றின.
கல்வகுன்ட்ல சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் வெற்றி பெற்ற 88 எம்.எல்.ஏக்களில் 24 முதுகலைப்பட்டம், 2 பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளனர். இதில், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் படித்தவர்களும் அடங்கும்.

" 119 தொகுதியில் சந்திரசேகர ராவ் உள்பட 44 பேர் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள். 26 பேர் முதுகலைப் பட்டமும், இரண்டு பேர் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றுள்ளனர். முனைவர் பட்டம் பெற்ற ரமேஷ், கடாரி கிஷோர் குமார் ஆகிய இருவரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் "
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 4 மருத்துவர்கள், 12 வழக்கறிஞர்கள், 9 மருத்துவர்கள் உள்ளனர். இதைத் தவிர 24 பேர் 12-ம் வகுப்பும், 16 பேர் 10-ம் வகுப்பும், அதற்கு கீழ் உள்ளவர்களும் இருக்கின்றனர். ஒருவர் மட்டும் கல்வி கற்காதவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே உள்ளது. முதுகலைப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் துறை சார்ந்த நடவடிக்கையில் விரைவாகவும், தொழில்நுட்பம் சார்ந்தும் முடிவுகள் எடுக்க எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தேர்தலில் வேட்பாளர்கள் அளித்த உறுதிச் சான்றின் அடிப்படையில் Association of democratic reforms(ADR) எம்எல்ஏக்களின் குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு உள்ளிட்ட பல விவரங்களை வெளியிட்டு உள்ளது.
சொத்து மதிப்பு :

2014 தெலங்கானா தேர்தலில் 83 பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால், 2018 தேர்தலில் வெற்றி பெற்ற 119 எம்எல்ஏக்களில் 106 பேர்(90 சதவீதம்) கோடீஸ்வரர்கள். இதில், ஆளும் கட்சியில் 83 பேர், காங்கிரஸ் 14, AIMIM 5 , TDP 1 , பிஜேபி 1 ஆகியோர் தங்களின் சொத்து மதிப்பு 1 கோடிக்கும் அதிகம் என தெரிவித்து உள்ளனர்.
எம்எல்ஏக்கள் பட்டியலில் காங்கிரஸின் எம்.எல்.ஏ ராஜகோபால் ரெட்டி 314 கோடியுடன் முதல் இடத்திலும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஜனார்தன் ரெட்டி 161 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
குற்ற வழக்குகள் :

119 எம்.எல்.ஏக்களில் (61 சதவீதம்) 73 பேர் தங்களின் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதில், கொலை முயற்சி, பெண்கள் மீதான குற்றங்கள் உள்ளிட்ட தீவிரமான குற்ற வழக்குகளைக் கொண்டவர்கள் 47 பேர்.
ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியில் 50 , காங்கிரஸ் 14, AIMIM 2 , TDP 1 , பிஜேபி 1 எம்.எல்.ஏக்களின் மீது குற்ற வழக்குகள் உள்ளன என ADR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு பட்டம் பெற்றவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாக
தெலங்கானா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏக்களில் 58 சதவீதம் படித்து பட்டம் பெற்றுள்ளனர். அதனை பற்றியும், கூடுதலாக அம்மாநில எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்புகள் மற்றும் குற்ற வழக்குகள் பற்றியும் காணலாம்.