YouTurn

மதுபான ஊழல் வழக்கில் மகள் சிக்கியதால், 'நான் பிரதமர் மோடியின் நண்பன்' என சந்திரசேகர ராவ் கூறினாரா ?

மதுபான ஊழல் வழக்கில் மகள் சிக்கியதால், 'நான் பிரதமர் மோடியின் நண்பன்' என சந்திரசேகர ராவ் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டெல்லி மதுபான வழக்கில் தனது மகள் பெயர் சிக்கியதை அடுத்து திடீரென கே.சி.ஆர் மோடியின் நண்பன் மற்றும் ரசிகர் ஆனார்.

Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையின்படி, டெண்டர் தொடர்பான உரிமக் கட்டணத்தில் மதுக்கடைகளுக்கு ரூ.144.36 கோடி அளவிற்கு தள்ளுப்படி செய்ய அனுமதித்ததாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையின் ரிமான்ட் அறிக்கையில், தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா பெயர் இடம்பெற்றது. இதையடுத்து, தனது மகள் சிக்கியதால், நான் பிரதமர் மோடியின் சிறந்த நண்பன் எனக் கூறி முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளதாக இவ்வீடியோ பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.



Twitter link | Archive link 



வீடியோவில் கேசிஆர் பேசுகையில், " நரேந்திர மோடிக்கு எதிராக எனக்கு எதுவுமில்லை. அவர் மீது மரியாதை உள்ளது, நான் அவருடைய சிறந்த நண்பனும் கூட " என்று கூறுகிறார்.

உண்மை என்ன ? 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு நிலையில் இருந்து வருகிறார். அவரது மகளின் பெயர் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிக்கியதால், நான் பிரதமர் பிரதமர் மோடியின் சிறந்த நண்பன் எனக் கூறி பாஜக பக்கம் சாய்வதாக பரப்பப்படும் வீடியோ குறித்து தேடுகையில், அந்த வீடியோ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.



2018ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி Xplorer India எனும் யூடியூப் சேனலில், "I am Modi's Best Friend" - CM KCR on his relationship with PM Modi " எனும் தலைப்பில் வெளியான வீடியோவில், " நரேந்திர மோடிக்கு எதிராக எனக்கு எதுவுமில்லை. அவர் மீது மரியாதை உள்ளது, நான் அவருடைய சிறந்த நண்பன். நாட்டின் மெதுவான முன்னேற்றத்திற்கே நான் எதிரானவன் " எனப் பேசியுள்ளார். அதில் இருந்து 30 நொடிகள் கொண்ட பகுதியை தற்போது பரப்பி வருகிறார்கள்.



தெலங்கானா முதல்வர் கேசிஆர் அளித்த முழுமையான பேட்டி 2018 மார்ச் 4ம் தேதி தெலுங்கு யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.



தெலங்கானாவின் கரீம்நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை தெலுங்கில் மரியாதையற்ற வார்த்தைகளால் விமர்சித்ததாக பாஜகவினரால் குற்றம்சாட்டப்பட்டு சர்ச்சையானது. இதையடுத்து, கேசிஆர் விளக்கம் அளித்த பேட்டியில் அவ்வாறு பேசி இருக்கிறார்.
முடிவு : 


நம் தேடலில், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தனது மகள் சிக்கியதை அடுத்து, நான் பிரதமர் மோடியின் சிறந்த நண்பன் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாக பாஜகவினர் பரப்பும் தகவல் பொய்யானது. பாஜகவினரால் பரப்பப்படும் வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க