யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கர்நாடகாவின் தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜேபி கட்சியின் வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாதவர் என சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 28 வயதான தேஜஸ்வி சூர்யா கர்நாடகாவின் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர். தேஜஸ்வி...
பரவிய செய்தி
தேஜஸ்வி சூர்யா கர்நாடகாவில் சாதாரண லாரி ட்ரைவர் உடைய மகன். எந்தவொரு சிறு அரசியல் பின்புலமும் கூட இல்லாமல் வென்றவர்.
விரிவான விளக்கம்
கர்நாடகாவின் தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜேபி கட்சியின் வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாதவர் என சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
28 வயதான தேஜஸ்வி சூர்யா கர்நாடகாவின் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர். தேஜஸ்வி சூர்யா தன் சிறு வயதில் கார்கில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் தன் ஓவியங்களை விற்பனை செய்து சேகரித்த நிதியை அளித்ததாக செய்தித்தாளில் இடம்பெற்ற செய்திகளை அவரின் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பே பகிர்ந்து இருந்தனர்.
தற்போது தேஜஸ்வி சூர்யா எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாதவர் எனக் கூறுவது முற்றிலும் தவறான தகவலாகும். தேஜஸ்வி சூர்யாவின் உறவினரான(மாமா) ரவி சுப்ரமண்யா என்பவர் கர்நாடகாவின் பசவனகுடி தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றவர்.

தேஜஸ்வி சூர்யா அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்தே வந்தவர். அவரின் தந்தை சாதாரண லாரி டிரைவர் என்றுக் கூறுவதெல்லாம் முற்றிலும் தவறான தகவல். தேஜஸ்வி சூர்யா கர்நாடகாவில் பிஜேபியின் யுவ மோர்ச்சா அமைப்பின் துணைத் தலைவராக இருந்தவர்.
தேஜஸ்வி சூர்யா தன் பேச்சுகளில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். மோடி எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக மார்ச் 2019-ல் தேஜஸ்வி சூர்யா பேசிய காணொளி வைரல் ஆகியது.
அதில், " அனைத்து மோடி எதிர்ப்பு சக்திகளும் மோடிக்கு எதிராக ஒன்று சேர்ந்து அவரை தடுக்க பார்க்கிறார்கள். மோடியின் நோக்கம் புதிய மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்குவது, அவர்களின் நோக்கம் அவரை தடுப்பது. அவர்களிடம் நேர்மறையான நோக்கம் இல்லை.
நீங்கள் மோடியுடன் இருந்தால், இந்தியா உடன் இருக்கிறீர்கள். நீங்கள் மோடியுடன் இல்லை என்றால், இந்திய எதிர்ப்பு சக்திகளை வலுவடையச் செய்வீர்கள் " என பேசி இருந்தார்.
தேஜஸ்வி சூர்யா அரசியல் பின்புலம் இல்லாதவர், லாரி ஓட்டுனரின் மகன் என்றெல்லாம் கூறி பதிவிடுவது அவர்களின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால், அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவல்களே.

All anti-India forces have united to stop Modi. While Modi's agenda is building a new & robust India, their agenda is to stop him. They have no positive agenda.
If you are with Modi, you are with India. If you are not with Modi, then you are strengthening anti-India forces. pic.twitter.com/k0mXzqItrG
— Tejasvi Surya (@Tejasvi_Surya) March 22, 2019