YouTurn

தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம்.. பழைய ஃபோட்டோஷாப் படத்தை பரப்பும் பாஜக நிர்மல் குமார்!

தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம்.. பழைய ஃபோட்டோஷாப் படத்தை பரப்பும் பாஜக நிர்மல் குமார்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம்..



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஒருபுறம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான மக்கள் குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கையில், மறுபுறம் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் டாஸ்மாக் கடைகள் தங்கு தடையின்றி தொடர்ந்து இயங்கி கொண்டும், தங்களது விற்பனை இலக்கை அடைந்து கொண்டும் தான் இருக்கின்றன.

இதற்கிடையில், லாரி ஒன்றில் முகப்பில் தொடங்கவிடப்பட்டு உள்ள அறிவிப்பு பலகையில் " தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம் " என எழுதப்பட்டு இருக்கும் புகைப்படத்தை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமாரும் இப்படத்தை பதிவிட்டு " இதில் என்ன அவசரம் " எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.







உண்மை என்ன ?  

" தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம் " என எழுதப்பட்டு இருக்கும் லாரியின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், இந்த லாரியின் படம் கடந்த பல ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசை விமர்சித்தும், ட்ரோல் செய்தும் பரப்பப்பட்டு வருகிறது.



மேற்கொண்டு கீ வார்த்தைகளை கொண்டு தேடுகையில், " 7  ஆண்டுகளுக்கு முன்பாக 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் tnstcworkers எனும் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. மேலும், அந்த பலகையில் எழுதப்பட்ட வார்த்தைகள் சாய்வாக இருப்பதை பார்க்க முடிந்தது.



Facebook link 

ஆகையால், நமக்கு கிடைத்த தெளிவானப் படத்தை fotoforensics தளத்தில் பதிவேற்றம் செய்து பார்க்கையில், " தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம் " என்ற வாசகம் தனியாக எடிட் செய்யப்பட்டது போன்று காண்பித்தது.



சரி, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்களை கொண்டு செல்லும் வாகனங்களில் என்ன மாதிரியான வாசங்கள் எழுதப்பட்டு இருக்கும் என அறிந்து கொள்ள தேடிய போது, சமீபத்தில் சமயபுரம் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் வேன் போன்ற வாகனத்தில் டாஸ்மாக் என்றும், TASMAC on duty என்ற வாசகங்களே இடம்பெற்று இருக்கின்றன.



முடிவு : 

நம் தேடலில், திமுக ஆட்சியில் லாரி ஒன்றில் தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம் என எழுதப்பட்டு இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் சமீபத்தியது அல்ல, கடந்த 2016ல் அதிமுக ஆட்சியில் இருந்தே இப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இது எடிட் செய்யப்பட்ட படம் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க