YouTurn

தமிழ்நாட்டு இரயிலில் பீகார் தொழிலாளர்களிடம் டிடிஇ மோசமாக நடந்து கொள்வதாகப் பரப்பப்படும் போலி வீடியோ !

தமிழ்நாட்டு இரயிலில் பீகார் தொழிலாளர்களிடம் டிடிஇ மோசமாக நடந்து கொள்வதாகப் பரப்பப்படும் போலி வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாட்டை விட்டு ஓடும் பீகாரிகளுக்கு இப்படித்தான் டிடி டிக்கெட் கொடுக்கிறார்கள். டிடியின் இந்த நடத்தை சரியா, அவர் சீருடை கூட அணியவில்லை.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலி வீடியோக்கள் பரப்பப்பட்டது. அத்தகைய சம்பவங்கள் ஏதும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை எனத் தமிழ்நாடு காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், போலி செய்தி பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பரவிய போலிச் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து 'யூடர்ன்' கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

https://twitter.com/lonewolf_singh/status/1633371174259556353?s=46&t=kIszbQH_arRSG8kPbuGeZw

Archive link 

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரயிலில் பீகார் தொழிலாளர்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்கள் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அவ்வீடியோவில் டிடிஇ ஒருவர் பயணியிடம் மிக மோசமாக நடந்து கொள்கிறார்.

https://twitter.com/sabirsh48723440/status/1633464038377263107?s=46&t=kIszbQH_arRSG8kPbuGeZw

Archive link 

உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீ ஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். ‘Run on Track’ என்ற யூடியூப் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோவின்  முழு காணொளி கிடைக்கப்பட்டது. அப்பக்கத்தில், 2023, மார்ச் மாதம், 3ம் தேதி அவ்வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் 15வது நிமிடத்திற்கு மேல் பரவக் கூடிய வீடியோ பகுதி உள்ளது.



இந்தியில் உள்ள அத்தலைப்பினை மொழி பெயர்த்துப் படிக்கையில் ‘சம்பூர்ணா கிராந்தி விரைவு இரயிலின் நிலை இதுதான்’ என இருப்பதைக் காண முடிந்தது. சம்பூர்ணா கிராந்தி விரைவு இரயில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகரிலிருந்து புது டெல்லி வரை இயக்கப்படுகிறது.



இதிலிருந்து பரவக் கூடிய வீடியோவில் உள்ள சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததல்ல என்பதை அறிய முடிகிறது.



இவ்வாறு பரவக் கூடிய வீடியோ ஒன்றின் ‘இரயில் சேவா’ என்ற டிவிட்டர் பக்கத்திலிருந்து கடந்த மார்ச் 9ம் தேதி டானாபூர் இரயில் நிலைய கோட்ட இரயில்வே மேலாளரை (DRM) டாக் செய்து 'இது தொடர்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என கமெண்ட் செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/RailwaySeva/status/1633700474565132290

 

Archive link 

மேலும் அந்த டிடிஇ பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக டானாபூர் இரயில் நிலைய டிவிட்டர் பக்கத்திலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது. டானாபூர் இரயில் நிலையம் பீகார் மாநிலம் பாட்னாவில் அமைந்துள்ளது. பாட்னா முதல் டெல்லி செல்லும் இரயில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.


மேலும் படிக்க : தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களை தாக்கி கொல்வதாக வடநாட்டில் பரப்பப்படும் வதந்தி !

இதேபோல் பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பரவிய பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மைகளை யூடர்னில் செய்திகளாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகள் கொல்லப்படுவதாகப் பரவும் வேறு சில வதந்தி வீடியோக்கள் !

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களிடம் டிடிஇ மோசமாக நடந்து கொள்வதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அது பாட்னாவிலிருந்து புது டெல்லி செல்லக்கூடிய சம்பூர்ணா கிராந்தி விரைவு இரயிலில் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க