YouTurn

தமிழ்நாட்டின் தாரா நெடுஞ்சாலையில் உள்ள சிவலிங்கம் மீது 365 நாளும் நீர் விழும் அதிசயம் எனப் பரவும் பொய் !

தமிழ்நாட்டின் தாரா நெடுஞ்சாலையில் உள்ள சிவலிங்கம் மீது 365 நாளும் நீர் விழும் அதிசயம் எனப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்த சிவலிங்கம் தமிழ்நாட்டில் தாரா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. வருடத்தில் 365 நாட்களும் சிவலிங்கத்தின் மீது வானத்திலிருந்து தொடர்ந்து நீர் விழுவதை இங்கே காணலாம். வானத்திலிருந்து தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது ஆச்சரியமான உண்மை.

Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மிழ்நாட்டில் தாரா நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள சிவலிங்கம் மீது வருடத்தில் 365 நாட்களும் வானத்தில் இருந்து தொடர்ந்து நீர் விழுவதாக வனப் பகுதியில் நீரோடை அருகே அமைந்துள்ள சிவலிங்கத்தின் வீடியோ ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வீடியோவில், சிவலிங்கத்தின் மீதிருந்து கீழே நீர் வடிந்துகொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.



Archive link



உண்மை என்ன ? 

தாரா நெடுஞ்சாலை சிவலிங்கம் குறித்து தேடுகையில், கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே இத்தகவல் இந்தியா முழுவதும் பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது. ஆகையால், வீடியோவில் இருந்து கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜூலை 26ம் தேதி மலேசியா முகநூல் பக்கம் ஒன்றில் செலங்கோரில் உள்ள பாது குகையின் ஓம் சிவ்ய நம தியான ஆலயம் எனக் கூறி அதே சிவலிங்கத்தின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த ஆலயத்தின் கூகுள் மேப் லிங்கும் இடம்பெற்று இருக்கிறது.



Facebook link | Archive link

மலேசியாவில் உள்ள சிவலிங்கத்தின் கோவில் குறித்து "Gomback shivan temple" எனும் தலைப்பில் பல்வேறு யூடியூப் சேனல்களில் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், சிவலிங்கத்தில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.



எனினும், கோவில் குறித்து பிரத்யேக இணையதள பக்கங்கள் ஏதும் கிடைக்கவில்லை. மாறாக, malaysiahanuman எனும் இணையதளத்தில் Shivan Meditation Sanctuary, Bentong Old Road, Gombak, Selangor எனும் தலைப்பில் வெளியான கட்டுரை கிடைத்தது. ஆனால், அதில், சிவலிங்கத்தில் இருந்து தண்ணீர் வடிவது குறித்து எந்த தகவலும் இல்லை.



இந்த சிவலிங்கம் குறித்து மேற்கொண்டு தேடுகையில், 2019ம் ஆண்டு வெளியான யூடியூப் வீடியோவில் சிவலிங்கத்தை சுற்றி கட்டுமானப் பணிகள் நடைபெறும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. அந்த வீடியோவில் சிவலிங்கத்தின் மீது வானில் இருந்து தண்ணீர் விழவில்லை என்பதை தெளிவாய் காணலாம்.

மேலும் படிக்க : 28,450 ஆண்டுகள் பழமையான சிவனின் கல்ப விக்ரஹா சிலை கிடைத்ததாக அர்ஜுன் சம்பத் பரப்பும் வதந்தி !

மேலும் படிக்க : இந்தோனேசியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவாலயமா ?

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாட்டில் தாரா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சிவலிங்கம் மீது 365 நாட்களும் வானத்தில் இருந்து நீர் விழுவதாகப் பரவும் தகவல் தவறானவை. வைரல் செய்யப்படும் வீடியோ மலேசியாவைச் சேர்ந்து, தமிழ்நாடு அல்ல. கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் வீடியோவில் சிவலிங்கத்தின் மீது நீர் விழவில்லை என்பதையும் அறிய முடிந்தது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க