YouTurn

3-ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் பாபாராம்தேவ் படமா ?| அவர் யார் தெரியுமா ?

3-ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் பாபாராம்தேவ் படமா ?| அவர் யார் தெரியுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக பள்ளியில் வழங்கப்பட்ட 3-ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபாராம்தேவ் உடைய புகைப்படம் பெற்று இருப்பதாக வெளியான ட்வீட் ஒன்றை காண நேரிட்டது. உண்மையில், சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்று இருப்பது பாபாராம்தேவ் புகைப்படம் அல்ல, வரகனேரி...

பரவிய செய்தி

தமிழ்நாடு 3-ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் பாபாராம்தேவ் !

விரிவான விளக்கம்

தமிழக பள்ளியில் வழங்கப்பட்ட 3-ம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபாராம்தேவ் உடைய புகைப்படம் பெற்று இருப்பதாக வெளியான ட்வீட் ஒன்றை காண நேரிட்டது.

உண்மையில், சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்று இருப்பது பாபாராம்தேவ் புகைப்படம் அல்ல, வரகனேரி வேங்கடேச சுப்ரமணிய ஐயர் உடைய புகைப்படமாகும். சுருக்கமாக வ.வே.சு.ஐயர் என அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைக்காக பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும், மொழிப் பெயர்ப்பாளருமான வ.வே.சு.ஐயர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.



வ.வே.சு.ஐயரின் புகைப்படத்தை சமூகவியல் பாடப்புத்தகத்தில் பாரதியார் புகைப்படத்திற்கு கீழே இடம்பெறச் செய்துள்ளனர். முனிவர் போன்று தாடியுடன் இருப்பதால் பாபாராம்தேவ் என தவறாக புரிந்து கொண்டு பகிர்ந்து உள்ளனர்.

தமிழ் சிறுகதைகளின் தந்தை என அழைக்கப்படும் வ.வே.சு.ஐயருக்கும், பாபாராம்தேவ்க்கும் வித்தியாசம் தெரியவில்லையா என ட்வீட் பதிவை பகிர்ந்து கிண்டல் செய்யும் பதிவுகளும் பதிவிடப்படுகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…