YouTurn

தமிழ்நாடு காவல்துறை FIR-ல் சாதியைக் குறிப்பிட ஒரு பகுதி இருப்பதாக அண்ணாமலை சொன்ன பொய் !

தமிழ்நாடு காவல்துறை FIR-ல் சாதியைக் குறிப்பிட ஒரு பகுதி இருப்பதாக அண்ணாமலை சொன்ன பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாடு FIR-ல் ஜாதி பெயரைக் குறிப்பிட ஒரு பகுதி உள்ளது. - அண்ணாமலை (பாஜக)

 

விரிவான விளக்கம்

பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 3ம் தேதி சேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பியது தொடர்பாகப் பேசுகையில், தமிழ்நாடு அரசின் FIR-ல் பெயர், முகவரி, தொழில், சாதி என்று இருக்கும். நமது FIR-ல் சாதி ஒரு column உள்ளது எனக் கூறியுள்ளார். 



மேலும், அமலாக்கத்துறையைப் பொறுத்த அளவில் ஒரு சம்மன் அனுப்பப்படுகிறது என்றால் ஒரு base FIR-ஐ எடுத்துக் கொள்வார்கள். வட இந்தியாவில் பெயருடன் சாதிப் பெயர்கள் போடப்படுகிறது. நான் யூகிப்பது என்னவென்றால், அமலாக்கத்துறையில் உள்ள வட இந்திய அதிகாரிகள் தமிழ்நாட்டின் தன்மை எதுவும் தெரியாமல் சாதி பெயரைக் குறிப்பிட்டு அனுப்பி இருப்பார்கள். இதனை அமலாக்கத்துறை வருகின்ற காலங்களில் திருத்திக்கொள்ள வேண்டும் எனப் பேசியுள்ளார். 

உண்மை என்ன ?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போலத் தமிழ்நாடு முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதியைக் குறிப்பிடும் பகுதி உள்ளதா எனத் தேடியதில் அது ஒரு தவறான தகவல் என்பதை அறிய முடிந்தது. 

கடந்த 2022, ஏப்ரல் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி தர்மபுரம் ஆதீனத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லும் போது கருப்பு கொடிகளைக் காண்பித்தும் கையில் இருந்த பதாகைகளைச் சாலையில் வீசியும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக FIR பதிவு செய்யப்படவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பு கூறிவந்தது. அப்போது காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட FIR-ஐ உதாரணமாக  பார்ப்போம்.

மேலும் படிக்க : “ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்” வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !



அந்த FIR-ல் யாருடைய சாதிப் பெயரும் குறிப்பிடப்படவில்லை. சாதியைக் குறிப்பிடும் எந்த பகுதியும் அதில் இல்லை. 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் மற்றும் சாதி மோதல் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகள் பற்றிய விவரங்களிலேயே சாதிப் பெயரை குறிப்பிடும் வழக்கம் உள்ளது.

இவற்றில் இருந்து தமிழ்நாடு முதல் தகவல் அறிக்கையில் சாதிப் பெயர் குறிப்பிடும் பகுதி உள்ளதாக அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாடு காவல்துறையின் FIR-ல் சாதிப் பெயர் குறிப்பிட ஒரு பகுதி  இருப்பதாக அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க