YouTurn

மருத்துவமனை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்பு கொள்ளும் எண்கள் என பரவும் தவறான தகவல் !

மருத்துவமனை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்பு கொள்ளும் எண்கள் என பரவும் தவறான தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

Mr. Ma. Subramaniam MLA, Minister for Health and Ex. Mayor for Chennai.
Mobile - 9176700000
Home - 04422500999
Mail.ID: ma.subramanian@yahoo.com
Address: 4/7 Labour Colony, Guindy,
Chennai 600032.

Any Hospital related issues please what's up.... dont call him but you will get a call back from concern department. Pls circulate to the needy who needs hospital bed, oxygen etc. It will be useful to some one..

விரிவான விளக்கம்

தமிழக மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தொடர்பாக பிரச்சனைகளுக்கு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களை வாட்ஸ் அப் வழியாக தொடர்பு கொள்ளுங்கள், போன் செய்ய வேண்டாம், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பினால் சம்பந்தப்பட்ட துறையில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சில தொடர்பு எண்கள் மற்றும் முகவரியுடன் கூடிய ஃபார்வர்டு செய்தி ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ? 

ஃபார்வர்டு செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு நாம் தொடர்பு கொண்ட போது வாட்ஸ் மூலமாகவோ, அழைப்பு மூலமாகவோ எந்த பதிலும் இல்லை. சுகாதார அமைச்சர் தரப்பில் வழங்கப்பட்ட சேவை எண்கள் என அதிகாரப்பூர்வ தகவல்களும் ஏதும் இல்லை.



Twitter link | Archive link

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில், " வைரல் செய்யப்படும் ஃபார்வர்டு தகவல் போலியானது " எனப் பதிவிட்டு இருக்கிறார்கள். அவசர உதவி எண்கள் பற்றி பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் இடம், ஆக்சிஜன், இரத்தம் என ஏதோ ஒரு மருத்துவ தேவைக்கு பலரும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக உதவியும் வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், தவறான ஃபார்வர்டு செய்திகளில் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க