
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

இந்துக்கள் பெரியார் சிலை மீது கை வைத்தால் இந்து கோயில்களை தகர்போம்- மு.க.ஸ்டாலின்

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
Youtube link
இலங்கை தமிழர் மீது இப்போது தான் அக்கறையா, உலகப் பொதுமறையா தேசிய நூலாக்குவார்களா எனக் கேள்வி எழுப்பியதோடு திமுகவின் தேர்தல் அறிக்கையை வெற்று அறிக்கை என சீமான் சாடி இருந்தார். இதற்காகவே, இப்படியொரு போலியான செய்தியை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
Archive link
" இந்துக்கள் பெரியார் சிலை மீது கை வைத்தால் இந்து கோயில்களை தகர்போம்- மு.க.ஸ்டாலின்" என 2018-ம் ஆண்டு தேதியிட்ட தந்தி டிவி நியூஸ் கார்டுடன் எல்லாரும் நம்பி விட்டீர்களா, இவர்தான் 1000 கோடி செலவில் இந்து கோயில்கள் சீரமைக்கப்படும் என்று சொல்கிறார் எனக் குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
ஆனால், இது எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ் கார்டே. மு.க.ஸ்டாலின் இந்துக் கோவில்களை தகர்ப்போம் எனக் கூறியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
சமீப காலமாக தி.மு.க மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில சமூக விரோதிகள் என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துகளை சொன்னதுபோல போலிப் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த விஷமச்செயலை செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன் pic.twitter.com/woEkkc3aql
— M.K.Stalin (@mkstalin) March 22, 2018
Archive link
மேலும், 2018ல் மு.க. ஸ்டாலின் உடைய ட்விட்டர் பக்கத்திலேயே, சமீப காலமாக தி.மு.க மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில சமூக விரோதிகள் என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துகளை சொன்னதுபோல போலிப் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த விஷமச்செயலை செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன் " என தன்னைப் பற்றி பகிரப்படும் போலிச் செய்திகள் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.
Archive link
" தந்தி டிவியில் கருத்து கணிப்பில் இந்துக்களை எதிர்க்கும் திமுகவின் உண்மையான முகம் கிழித்தெறியப்பட்டது. சிந்தித்து வாக்களியுங்கள் இந்துக்களே " எனக் கூறி இந்துக்களை எதிர்க்கிறார் ஸ்டாலின் என தந்தி டிவியில் கருத்துக் கணிப்பு நிகழ்ந்ததாக டெம்ளேட் ஒன்றைப் பகிர்ந்து வருகிறார்கள்.
விரிவாக படிக்க : மு.க ஸ்டாலின் இந்துக்களை எதிர்க்கிறாரா என போலிக் கருத்துக்கணிப்பு
இந்த தந்தி டிவியின் கருத்துக் கணிப்பு டெம்ளேட் போலியானது மற்றும் தந்தி டிவி இப்படியொரு கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம். ஆனால், தற்போது தேர்தல் தருணத்தில் மீண்டும் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தனித்தனி தொகுதியென திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா ?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களும் எதிரான போலி செய்திகள், போலி நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க : எல்.முருகன் பசுவிற்கு உரிமைத் தொகை வழங்கச் சொன்னாரா ?