YouTurn

தமிழக பள்ளிக் கல்வியில் புதிய மாற்றங்கள் என தவறான ஊடகச் செய்தி !

தமிழக பள்ளிக் கல்வியில் புதிய மாற்றங்கள் என தவறான ஊடகச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த சில ஆண்டுகளில் தமிழக பள்ளிக் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள்கள் இல்லை, 11 மற்றும் 12-ம் வகுப்பில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என்ற...

பரவிய செய்தி

10-ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது. ஒரே தாள் மட்டுமே. 11 மற்றும் 12-ம் வகுப்பில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கும் முறையை அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.

விரிவான விளக்கம்

கடந்த சில ஆண்டுகளில் தமிழக பள்ளிக் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள்கள் இல்லை, 11 மற்றும் 12-ம் வகுப்பில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என்ற முறையையும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியாகின.



சமீப ஆண்டுகளில் 1200 மதிப்பெண் முறையை குறைத்து 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன, அடுத்த ஆண்டில் இருந்து அதனை 500 மதிப்பெண்ணாக குறைக்கவும், 500 மதிப்பெண் என்பதால் மொழிப் பாடத்தில் ஏதாவது ஒன்றை விருப்ப பாடமாக தேர்வு செய்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்து உள்ளதாக செய்தி வெளியாகியது.

இம்முறையை கல்வித்துறை நடைமுறைக்கு கொண்டு வர வாய்ப்புகள் இருக்கின்றன என  அனைத்து தமிழக செய்தி சேனல்களிலும் வெளியாகின. இந்த செய்திக்கு கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தமிழ் மொழியை ஓரங்கட்ட இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினர்.



ஆனால், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஒரேயொரு மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும், 10-ம் வகுப்பில் இரு தாள்கள் முறையே பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து உள்ளது.



இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், " 11 மற்றும் 12-ம் வகுப்பில் மொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மையில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 6 பாடத் திட்டங்கள் தொடரும், இரண்டு மொழிப் பாடங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் " எனத் தெரிவித்து இருந்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்ததாகச் செய்தி வெளியிட்டது ஊடகங்கள். ஆனால் அதைப் பற்றிய எந்த அரசாணையோ, பரிந்துரை கோப்போ, அதிகாரப்பூர்வ செய்தியோ, பேட்டியோ இல்லை. எதன் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. தற்போது அமைச்சர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இருமொழிக் கொள்கை என்பது நீக்கப்பட்டால் நிச்சயம் அது பெரிய பாதிப்பு தான். ஆனால், இந்த செய்தி வெளியிடப்பட்டது ஏன் என்பதற்கு விடை இல்லை.

சுருக்கமாக

ஒரேயொரு மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.