
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X link
விரிவான விளக்கம்

அயோத்தியில் பட்டாசு லாரி தீப்பிடித்து எரிந்தது. தெய்வீகத் தூய்மை ஒரு நகைச்சுவை அல்ல. தர்மத்தையும் சங்கராச்சாரியாரையும் மதிக்கவும். பாஜக இந்து தர்மத்தைப் போலியாகப் பயன்படுத்தி சங்கராச்சாரியாரைத் தாக்கக் கூடாது. கோழை அண்ணாமலை நீ என் X கணக்கை உங்கள் பாஜக ஐடி செல் மூலம் shadow ban… https://t.co/qZ830Yu14Q pic.twitter.com/bf8n9LtGW0
— Gayathri Raguramm (@Gayatri_Raguram) January 17, 2024
மேலும் இந்த பட்டாசு டிரக் தீ பிடித்தது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அவரது X (எக்ஸ்) பக்கத்தில் ‘இந்தியா டுடே’ செய்தியைப் பதிவிட்டு “அயோத்தியில் பட்டாசு லாரி தீப்பிடித்து எரிந்தது. தெய்வீகத் தூய்மை ஒரு நகைச்சுவை அல்ல. தர்மத்தையும் சங்கராச்சாரியாரையும் மதிக்கவும். பாஜக இந்து தர்மத்தைப் போலியாகப் பயன்படுத்தி சங்கராச்சாரியாரைத் தாக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.
அயோத்தியில் பட்டாசு ஏற்றிவந்த லாரி தீப்பிடித்து எறியும் காட்சி
சரிதான் "பாபர்" ஆவி அது வேலைய காட்ட ஆரம்புச்சுடுச்சு...இன்னும் என்னென்ன நடக்க போகுதோ அயோத்தில... pic.twitter.com/NUS0mXw4TI
— THAHIR HUSSAIN.S (@thahirhussain36) January 17, 2024
உண்மை என்ன?
காயத்ரி ரகுராம் பதிவிட்ட இந்தியா டுடே செய்தியில், ‘ஜனவரி 16ம் தேதி இரவு, தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்குப் பட்டாசு ஏற்றிச் சென்ற டிரக் தீப்பிடித்து எரிந்தது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில் ‘இந்த டிரக் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வான வேடிக்கைகளை ஏற்றி வந்தது என நம்பப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் முரண்பட்ட தகவல்கள் இருப்பதையடுத்து, இச்சம்பவம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதேனும் வெளியாகியுள்ளதா எனத் தேடினோம். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் (Unnao) பகுதி காவல் துறையினர் அவர்களது X பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டிருந்த ஒரு தகவல் கிடைத்தது.
थाना पुरवा क्षेत्रांतर्गत ग्राम खरगीखेड़ा के पास एक ट्रक में आग लग जाने की घटना के संदर्भ में- @Uppolice pic.twitter.com/BzBH2zUzNC
— UNNAO POLICE (@unnaopolice) January 17, 2024
அதில், 2024, ஜனவரி 17ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பூர்வா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கர்கிகேடா கிராமத்தின் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற TN 28 AL 6639 என்ற டிரக் தீப்பிடித்தது. அதற்கான காரணம் தெரியவில்லை. தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் தீயை முற்றிலுமாக அணைத்ததால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. சாலையில் இருந்த டிரக் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக இயங்குகிறது. டிரக் உரிமையாளரிடம் காவல் துறையினர் பேசியதில், தமிழ்நாட்டிலிருந்து பஹ்ரைச் (Bahraich) என்னும் பகுதியில் உள்ள கடைகளுக்குப் பட்டாசு, குழந்தைகள் போஸ்டர், திரைப்பட கலைஞர்களின் போஸ்டர், மத போஸ்டர் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது).
உன்னாவ் காவல் துறை அறிக்கையின்படி பட்டாசு ஏற்றிச் சென்று தீ பிடித்து எறிந்த டிரக் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றது கிடையாது என்பது தெரியவருகிறது.
முடிவு:
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்குத் தமிழ்நாட்டிலிருந்து பட்டாசு ஏற்றிச் சென்ற டிரக் தீ பிடித்து எரிந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. அந்த டிரக் தமிழ்நாட்டில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் (Bahraich) என்னும் பகுதியில் உள்ள கடைகளுக்குப் பட்டாசு மற்றும் இதர பொருட்களை ஏற்றிச் சென்றது காவல் துறையின் அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.