YouTurn

தலையில் கட்டுடன் வைரலான பாஜக பெண் நிர்வாகி இஸ்லாமியர் வேடத்தில் இருப்பதாக வதந்தி !

தலையில் கட்டுடன் வைரலான பாஜக பெண் நிர்வாகி இஸ்லாமியர் வேடத்தில் இருப்பதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அதே அம்மணி, இந்த முறை இஸ்லாமியர் வேஷம்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

2020 செப்டம்பர் மாதம் சுவர் விளம்பரம் பிரச்சனை காரணமாக திமுகவினருக்கு எதிராக தமிழக பாஜகவினர் கட்டுடன் போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தவறாக ட்ரோல் செய்யப்பட்டது. தமிழக பாஜகவின் செயலாளர் சுமதி வெங்கடேஷ் தலையில், கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் தவறாக ட்ரோல் செய்யப்பட்டது. அதுகுறித்து நாம் விரிவானக் கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : வைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன ?

கடந்த ஆண்டு தலையில் கட்டுடன் இருந்த அதே பாஜக பெண் நிர்வாகி தற்போது இஸ்லாமிய பெண் வேடத்தில் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

கடந்த ஆண்டு தலையில் கட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜகவின் செயலாளர் சுமதி வெங்கடேஷ் தற்போது இஸ்லாமிய பெண் வேடத்தில் இருப்பதாக பரப்பப்படும் தகவல் தவறானது. உண்மையில், பரப்பப்படும் புகைப்படத்தில் இஸ்லாமிய பெண்ணிற்கு பின்னால் இருப்பவரே சுமதி வெங்கடேஷ்.



Twitter Link | Archive link  

நவம்பர் 21-ம் தேதி தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உடைய ட்விட்டர் பக்கத்தில், " நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வருங்கால வேட்பாளர்கள் தங்களது விருப்பப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர் " எனப் பதிவிட்ட பதிவில் வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.





முடிவு : 

நம் தேடலில், கடந்த ஆண்டு தலை, கையில் கட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வைரலான தமிழக பாஜக செயலாளர் சுமதி வெங்கடேஷ் இம்முறை இஸ்லாமிய பெண் வேடத்தில் இருப்பதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த புகைப்படத்தில் இஸ்லாமிய பெண்ணிற்கு பின்னால் இருப்பவரே சுமதி வெங்கடேஷ் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க