YouTurn

தமிழ்கேள்வி செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சையென பாலிமர் செய்தி வெளியிட்டதா ?

தமிழ்கேள்வி செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சையென பாலிமர் செய்தி வெளியிட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நான் ஒரு மிஷினரி கைகூலி. பாஜக நல்லதே செய்தாலும் எதிர்ப்பது மட்டுமே என் பணி.. பாஜகவுக்கு எதிரான செய்திகளை திரித்து பரப்புவது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை - தமிழ்கேள்வி செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சை.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

ஊடகவியலாளரும், தமிழ்கேள்வி யூடியூப் சேனலை நடத்தி வரும் செந்தில் வேல் அவர்கள், " நான் ஒரு மிஷினரி கைகூலி. பாஜக நல்லதே செய்தாலும் மட்டுமே என் பணி.. பாஜகவுக்கு எதிரான செய்திகளை திரித்து பரப்புவது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை " என பேட்டி அளித்ததாக பாலிமர் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சை என பரப்பப்படும் பாலிமர் நியூஸ் கார்டில் எழுத்துப்பிழை இருப்பதை பார்க்க முடிந்தது. எனினும், ஜூலை 13-ம் தேதியிட்ட பாலிமர் நியூஸ் கார்டு குறித்து அதன் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை.



ஜூலை 13-ம் தேதி நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான உயர்நீதிமன்றம் உத்தரவு குறித்த செய்தியே வெளியாகி இருந்தது. வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் பாலிமர் சேனலின் வாட்டர் மார்க் இடம்பெறவில்லை என்பதை காணலாம். வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போதும் விஜய் தொடர்பான நியூஸ் கார்டே கிடைத்தது.



மேலும் படிக்க : உருமாறிய கொரோனா செய்திக்கு மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா ?

இதற்கு முன்பாக, செந்தில் வேல் பெயரில் போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து பகிரப்பட்ட ட்விட் ஒன்றை வைரல் செய்தது தொடர்பாக நாம் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் வெளியான போலி ட்வீடை பகிர்ந்த மாரிதாஸ் ரசிக பக்கம் !

முடிவு :

நம் தேடலில், தமிழ்கேள்வி செந்தில்வேல் பேட்டியால் சர்ச்சை என பரப்பப்படும் பாலிமர் சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ் கார்டு என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க