YouTurn

கேரளாவில் நடந்த விபத்தை கோவையில் நடந்ததாக தவறாக செய்தி வெளியிட்ட தமிழ் செய்தி ஊடகங்கள்!

கேரளாவில் நடந்த விபத்தை கோவையில் நடந்ததாக தவறாக செய்தி வெளியிட்ட தமிழ் செய்தி ஊடகங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த விபத்து கடந்த 2025 டிசம்பர் மாதம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கழகூட்டம் என்ற பகுதியில் நடந்தது.

பரவிய செய்தி

’கோவை குனியமுத்தூர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காரின் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியது’ -  ‘பாலிமர்’, ’குமுதம்’, ’News தமிழ்’ ஆகிய செய்தி ஊடகங்கள்.


Youtube Link 



X Link 



விரிவான விளக்கம்

சாலையை கடக்க முயன்ற கார் ஒன்றின் பக்கவாட்டில் மஞ்சள் நிற தனியார் பள்ளி பேருந்து ஒன்று மோதி சில அடிகள் தூரம் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சியை பதிவிட்டு, கோவை குனியமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஜனவரி மாதத்தில் இச்சம்பவம் நடந்ததாக ‘பாலிமர்’, ’குமுதம்’, ’News தமிழ்’ ஆகிய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த செய்தி வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, மலையாள செய்தித்தளமான ’Media One TV’ யூடியூப் தளத்தில் 2025 டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியைக் காணமுடிகிறது. 



தமிழ் செய்திஊடகங்கள் வெளியிட்டுள்ள அதே CCTV காட்சியை பதிவிடப்பட்டுள்ள இந்த செய்தியில், இந்த சம்பவம் கேரளாவின் ’கழகூட்டம்’ (Kazhakoottam) என்ற பகுதியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடுகையில், ’Asianet News மலையாளம்’ செய்தித்தளத்தில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில் திருவனந்தபுரம் நகரில் உள்ள ’கழகூட்டம்’ என்ற பகுதியில் இந்த விபத்து நடந்ததாகவும் இதனால் அலெக்சாண்டர் (72) என்ற கார் ஒட்டுநருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும், பள்ளி பேருந்தில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் கடந்த 2025 டிசம்பர் மாதம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கழகூட்டம் என்ற பகுதியில் நடந்தது என்பது தெரிய வருகிறது.


முடிவு:


கடந்த 2025 டிசம்பர் மாதம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடந்த விபத்தை தற்போது கோவை குனியமுத்தூரில் நடந்ததாக ‘பாலிமர்’, ’குமுதம்’, ’News தமிழ்’ ஆகிய செய்தி ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டிருக்கின்றன. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க